30வகை விருந்தினர் சமையல்--30 நாள் 30 வகை சமையல்,

30வகை விருந்தினர் சமையல் சம்மர் வெகேஷன் வந்துகொண்டே இருக்கிறது. வீட்டுக்கு வீடு உறவினர்கள் கூட்டம் அலையடிக்க ஆரம்பித்துவிடும். அப்படி வரும்...

30வகை விருந்தினர் சமையல்

சம்மர் வெகேஷன் வந்துகொண்டே இருக்கிறது. வீட்டுக்கு வீடு உறவினர்கள் கூட்டம் அலையடிக்க ஆரம்பித்துவிடும். அப்படி வரும் விருந்தினர்களை அசத்த உதவும் வகையில் சுவையான, வித்தியாசமான 30 வகை 'விருந்தினர் ஸ்பெஷல் ரெசிபி’களை இங்கே வழங்குகிறார் சமையல் கலை நிபுணர்

''முருங்கைக்காய் கீர், ஆலூ - பனீர் சாட், திடீர் போண்டா,  கார்ன் சூப், ரஸ்க் ஐஸ்க்ரீம் என ஸ்பெஷல் ரெசிபிகளை தந்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறினால்... உறவு வட்டத்தில் உங்கள் புகழ் கொடிகட்டிப் பறக்கும்'' என்று கியாரன்டி கொடுக்கும்  ரெசிபிகளை, பார்க்கும்போதே நாவில் நீர் ஊறும் விதத்தில் அழகுற அலங்கரித்திருக்கிறார் செஃப்

 கரகர பட்டன்ஸ்

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் (மூன்றையும் சேர்த்துக் கலந்து வேக வைக்கவும்), மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, வேக வைத்த பருப்பு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தண்ணீர் தெளித்து கெட்டியாக மாவு போல் பிசையவும். மாவை வெள்ளைத் துணியில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு, கட்டை விரலால் உருண்டையை அழுத்திவிடவும். இது பட்டன் போல இருக்கும். எண்ணெயை சூடாக்கி இந்த பட்டன்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

மசாலா மோர்

தேவையானவை: தயிர் - 500 மில்லி, கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - 2 இஞ்ச் நீள துண்டு, பச்சை மிளகாய் - 1 அல்லது 2, மினரல் வாட்டர் - ஒரு லிட்டர், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லி இலை, தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். தயிரில் மினரல் வாட்டர் விட்டு கடைந்து மோராக்கவும். இந்த மோரில், அரைத்த விழுதை சேர்த்துக் கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு, வடிகட்டி எடுத்து பரிமாறவும்.

குறிப்பு: வெயில் காலத்தில் வீட்டுக்கு  வரும் விருந்தினர்களை இந்த  மசாலா மோர் கொடுத்து உபசரிக்கலாம். இதை ஃப்ரிட்ஜில் வைத்தும் கொடுக்கலாம்.

 மசாலா வேர்க்கடலை

தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், மிளகாய்த்தூள்- கால் டீஸ்பூன், எண்ணெய் - டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடலை மாவு - 2 டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை போட்டு, ஒரு கை தண்ணீர் தெளித்துப் பிசிறி வடிகட்டவும். உப்பு, எண்ணெய், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து பிசிறினாற் போல கலக்கவும். கலவையை பேப்பர் தட்டில் பரவலாக வைத்து 'மைக்ரோவேவ் அவன்’ உள்ளே 2 நிமிடம் வைத்து எடுத்து, கலந்து ஆறவிட்டால்... மசாலா வேர்க்கடலை தயார்!

குறிப்பு: 'மைக்ரோவேவ் அவன்’ இல்லாதவர்கள் வேர்க்கடலை கலவையை, எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

 மேங்கோ மில்க் ஷேக்

தேவையானவை: மாம்பழத் துண்டுகள் (தோல் நீக்கியது) - ஒன்றரை கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை -  கால் கப்.

செய்முறை: பாலில் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு காய்ச்சி இறக்கி, ஆற வைக்கவும். மாம்பழத்தை  மிக்ஸியில் (கூழ் போல்) அரைத்து எடுக்கவும். மாம்பழ விழுதை பாலில் விட்டு நன்கு கலக்கவும். அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து, குளிரவிட்டு பரிமாறவும்.

 கொத்தவரங்காய் பருப்பு உசிலி

தேவையானவை: கொத்தவரங்காய் - 100 கிராம், கடலைப்பருப்பு - அரை கப், மிளகாய் வற்றல் - 5, கடுகு -  ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன், கறிவேப்பிலை- சிறிதளவு, மஞ்சள்தூள் -  ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி, வேக வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை 30 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து... கறிவேப்பிலை, பருப்பு விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கிளறவும். பருப்பு கலவை வெந்ததும், வேகவைத்த கொத்தவரங்காய் துண்டுகளை சேர்த்துக் கலந்து, சூடுபட கிளறி இறக்கவும்.

குறிப்பு: பீன்ஸிலும் இதே முறையில் பருப்பு உசிலி தயாரிக்கலாம்.

 வீட் ரவா  பைனாப்பிள் அல்வா

தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், பைனாப்பிள் விழுது, சர்க்கரை - தலா ஒன்றரை கப், வறுத்த முந்திரி துண்டுகள் - 15, குங்குமப்பூ - 4 அல்லது 5 இதழ்கள், நெய் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கடாயில் நெய் விட்டு, சூடானதும் கோதுமை ரவையை சேர்த்து சூடுபட கிளறவும். பிறகு, ரவை மூழ்கும் அளவுக்கு சுடு நீர் விட்டு கிளறவும். கெட்டியாகி வந்ததும் சர்க்கரை, பைனாப்பிள் விழுது, சேர்த்துக் கிளறவும். பிறகு, குங்குமப்பூ சேர்க்கவும். இறுகி கெட்டியாக வந்ததும் முந்திரி துண்டுகள் போட்டு நன்கு கிளறி இறக்கவும். இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

குறிப்பு: கிளறும் கரண்டியில் எடுத்தால் தானாக 'தொப்’பென்று விழ வேண்டும். இதுதான் சரியான அல்வா பதம்.

 சப்போட்டா மில்க்ஷேக்

தேவையானவை: சப்போட்டா பழம் - 4, பால் (காய்ச்சியது) - ஒரு லிட்டர், சர்க்கரை - கால் கப்.

செய்முறை: சப்போட்டா பழங்களை 'கட்’ செய்து உள்ளிருக்கும் விதையை நீக்கிவிட்டு, ஸ்பூனால் சதைப்பற்றை மட்டும் எடுக்கவும். அதை மிக்ஸியில் போட்டு, சர்க்கரை சேர்த்து, சிறிது பால் விட்டு அரைக்கவும். நன்கு மசிந்ததும் மீதமுள்ள பாலை மிக்ஸியில் விட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... சப்போட்டா மில்க் ஷேக் தயார்!

 புடலங்காய் சிப்ஸ்

தேவையானவை: விதை, பஞ்சு நீக்கிய புடலங்காய் துண்டுகள் - ஒரு கப், கடலை மாவு - 4 டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு  - தேவையானஅளவு.

செய்முறை: புடலங்காய் துண்டுகளை வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, அதில் புடலங்காய் துண்டுகளைப் போட்டு கலந்து கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி புடலங்காய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

 பூசணிக்காய் ரசவாங்கி

தேவையானவை: பூசணிக்காய் துண்டுகள் - ஒரு கப், புளி - சிறிய எலுமிச்சம்பழம் அளவு, மிளகாய் வற்றல் - 3 அல்லது 4, கடலைப் பருப்பு, தனியா, தேங்காய் துருவல் - தலா 2 டீஸ்பூன், பெருங் காயத்தூள் - கால் டீஸ்பூன், வேக வைத்த மொச்சைக் கடலை - கால் கப், வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப்,  எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை உப்பு சேர்த்துக் கரைத்து வடிகட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, அரைத்துக் கொள்ளவும். கடாயில் புளிக் கரைசல், அரைத்த விழுது, பூசணிக்காய் துண்டுகள் சேர்த்து கொதிக்கவிடவும். பூசணிக்காய் வெந்ததும் வேக வைத்த மொச்சைக் கடலை, துவரம்பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு சேர்ந்தாற் போல வந்ததும், கீழே இறக்கவும்.  கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை தாளித்து இதில் சேர்த்துக் கலக்கினால்... பூசணிக்காய் ரசவாங்கி தயார்.

 ஆலு  பனீர் சாட்

தேவையானவை: சிறிய பனீர் துண்டுகள் - அரை கப், சிறிய உருளைக்கிழங்கு துண்டுகள் (வேக வைத்தது) - அரை கப், வெங்காயம் - ஒன்று, பட்டாணி, கேரட் துண்டுகள் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, எலுமிச்சைச் சாறு -  ஒரு டீஸ்பூன், அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை, சாட் மசாலா பவுடர் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண் ணெய் விட்டு, சூடானதும் பனீர் துண்டுகளை போட்டு வதக்கி, லேசான பிரவுன் கலர் வரும் வரை சூடுபட கிளறி எடுக்கவும். உருளைக்கிழங்கு துண்டுகளையும் வதக்கி எடுக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... நறுக்கிய வெங்காயம், பட்டாணி, கேரட் துண்டுகள், இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, அஜினமோட்டோ சேர்த்துக் கிளறவும். எல்லா காய்களும் வெந்ததும் பனீர், உருளைக்கிழங்கு துண்டுகள், சாட் மசாலா சேர்த்துக் கலக்கவும். எலுமிச்சைச் சாறு விட்டு கலந்து  இறக்கிவிடவும். கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

 சாத பக்கோடா

தேவையானவை: சாதம் - ஒரு கப், கடலை மாவு - 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் -  ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சாதத்தை மசித்துக் கொள்ளவும். அதனுடன் கடலை மாவு வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை  சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண் ணெயை சூடாக்கி, சாதக் கலவையில் இருந்து சிறிது, சிறிதாக  கிள்ளி எடுத்து எண்ணெயில் போடவும். (உருட்டி போடக் கூடாது). வெந்ததும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடித்து அரித்து எடுக்கவும்.

குறிப்பு: கரகர என்று டேஸ்ட்டாக இருக்கும் இந்த பக்கோடாவை, மிகக் குறைவான நேரத்தில் செய்துவிடலாம்.

 பேபி பொட்டேடோ மசாலா ரோஸ்ட்

தேவையானவை: பேபி பொட்டேடோ (சின்ன உருளைக்கிழங்கு) - 250 கிராம், வெங்காயம் - 2, பூண்டு - 4 பல், பிரிஞ்சி இலை - 1, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன்,  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேபி பொட்டேடோவை வேக வைத்து, தோல் நீக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு தாளித்து... வெங்காய துண்டுகள், நசுக்கிய பூண்டு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, வேக வைத்த உருளைக்கிழங்கு போட்டு கிளறவும். டிரை ரோஸ்ட் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

 பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல்

தேவையானவை: கத்திரிக்காய் - 6, தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் -  கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை நீளவாட்டில் 'கட்’ செய்து தண்ணீரில் போடவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பை வறுக்கவும். ஆறியதும்... தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங் காயத்தூள் ஆகியவற்றை வறுக்கவும். கத்திரிக்காயை எடுத்து அதில் போடவும். உப்பு சேர்த்துக் கலந்து சூடுபட கிளறவும். வெந்து வரும் சமயம் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் - கடலைப்பருப்பு - தனியா பொடியைத் தூவி கிளறவும்.  தீயை நிறுத்திவிட்டு, ஒரு நிமிடம் கழித்து மீண்டும் கலந்து பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். 

குறிப்பு:  பொடியை தூவும் போது, அரை கப் வேக வைத்த காராமணி சேர்த்தும் இதனை செய்யலாம்.

 வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: முற்றிய வாழைக்காய் - ஒன்று (வேக வைக்கவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகாய் வற்றல் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வேக வைத்த வாழைக்காயை தோல் நீக்கி, கேரட் சீவும் சீவியில் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கிள்ளிய மிளகாய் வற்றல், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை  சேர்த்துக் கிளறவும். துருவிய வாழைக்காய், உப்பு இரண்டையும் சேர்த்து. கரண்டி காம்பினால் கலக்கி, நன்கு கலந்ததும் இறக்கி னால்... வாழைக்காய் பொடிமாஸ் தயார்!

 கதம்ப சாதம்

தேவையானவை: சாதம் - 2 கப், புளி - எலுமிச்சம்பழ அளவு, தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, மிக்ஸட் காய்கறி துண்டுகள் (உருளைகிழங்கும் சேர்க்கலாம்) - 2 கப், மிளகாய் வற்றல் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, துவரம்பருப்பு (வேக வைத்தது) - அரை கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - சிறிதளவு - கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து, அரைத்துக் கொள்ளவும். புளியுடன் உப்பு சேர்த்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். இதில் புளிக் கரைசலை விட்டு கொதிக்கவிடவும். பச்சை வாசனை போக கொதித்ததும், அரைத்த விழுது, வேக வைத்த காய்கறி - கிழங்கு துண்டுகள் சேர்த்து கொதிக்கவிட்டு, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கலக்கவும். நன்கு சேர்ந்தாற் போல வந்ததும் கறிவேப்பிலையைக் கிள்ளி போடவும். சாதத்தில் நெய்விட்டு மசித்து, காய்கறி கலவையை விட்டு கலக்கினால்... கதம்ப சாதம் தயார்.

குறிப்பு: இதற்கு அப்பளம், சிப்ஸ் சரியான  சைட் டிஷ்.

 வெந்தய மாங்காய்

தேவையானவை: மாங்காய் - ஒன்று, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் -  ஒரு துண்டு, மிளகாய் வற்றல் - 4, பெருங்காயம் - சிறு துண்டு, கடுகு -  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாங்காயைப் பொடியான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், வெந்தயம், மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து பொடி செய்யவும். மாங்காயில் உப்பு, வறுத்துப் பொடித்த பொடி சேர்த்துக் கலக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயை கடாயில் விட்டு, சூடானதும் கடுகு தாளித்து, மாங்காய் கலவையில் சேர்த்து, கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். 5 நிமிடம் ஊறிய பின் பரிமாறலாம்.

குறிப்பு: இதன் சுவையும், மணமும் அபாரமாக இருக்கும். தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிட... நிறைவான திருப்தி கிடைக்கும்.

 பனீர் 65

தேவையானவை: பனீர் துண்டுகள் - 15 அல்லது 20, இஞ்சி -  பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, சில்லி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், மைதா - கால் கப், சோள மாவு - 4 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பனீர் துண்டுகள், இஞ்சி - பூண்டு விழுது எலுமிச்சைச் சாறு, சில்லி சாஸ், உப்பு சேர்த்துக் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். மைதா, சோள மாவு, உப்பை சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பனீர் துண்டுகளை மைதா கலவையில் புரட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பனீர் துண்டுகளைப் போட்டு வெந்ததும் திருப்பிவிட்டு, பொன்னிறம் ஆனதும் எடுத்து எண்ணெயை வடிக்கவும். பனீர் துண்டுகளை தட்டில் வைத்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்பு: தக்காளி சாஸ், சட்னி இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

 பிரெட் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்- 6, வெண்ணெய் - 2 டீஸ்பூன், நூடுல்ஸ் (வெந்தது) - அரை கப், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - இஞ்சி துண்டுகள் - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு  (வேக வைத்தது) - 2, தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண் ணெயை சேர்த்து, உருகியதும்... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் - இஞ்சி துண்டுகள், உப்பு சேர்த்துக் கிளறவும். வெங்காயம் வெந்ததும் நூடுல்ஸ், மசித்த உருளைக்கிழங்கு,  தக்காளி சாஸ், கொத்தமல்லி இலை சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையில்  2 டீஸ்பூன் எடுத்து, ஒரு பிரெட் ஸ்லைஸ் மீது பரவலாக வைக்கவும். மற்றொரு பிரெட் ஸ்லைசை மேலே வைத்து லேசாக அழுத்திவிட்டு பரிமாறலாம். 

குறிப்பு: மிகக் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய இந்த சாண்ட்விச், பிரேக்ஃபாஸ்ட் தயாரிக்கும் டென்ஷனைக் குறைக்கும்.

 கத்திரிக்காய்  முருங்கைக்காய்  பட்டாணி பொரியல்

தேவையானவை: கத்திரிக்காய் - 6, முருங்கைக்காய் - 1, பச்சைப் பட்டாணி - ஒரு கப், பெரிய வெங்காயம் -  ஒன்று, தக்காளி - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு தாளிக்கவும். வெங்காய துண்டுகள், கத்திரிக்காய் துண்டுகள், முருங்கைக்காய் துண்டுகள், பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். நன்கு சூடுபட வதங்கி வரும்போது தக்காளி துண்டுகள், கால் கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். காய்கள் வெந்து வந்ததும் (தண்ணீர் வற்றியதும்) தேங்காய் துருவல் தூவி கலந்து எடுக்கவும்.

 ஓமப்பொடி ராய்த்தா

தேவையானவை: ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - ஒரு கப், தயிர் - 2 கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஓமப்பொடியை கையினால் நொறுக்கி போடவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலை ஆகியவற்றை கிள்ளிப் போடவும். இதனுடன் உப்பு, தயிர் சேர்த்துக் கலக்கினால்... ஓமப்பொடி ராய்த்தா தயார்.

 கார்ன் சூப்

தேவையானவை: இளம் சோளம் - ஒரு கப், சோள மாவு - 2 டீஸ்பூன், காய்கறி துண்டுகள் - ஒரு கப், பச்சை மிளகாய் - இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை, சீஸ் துருவல் - சிறிதளவு, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும் காய்கறி துண்டுகள், சோளம், பச்சை மிளகாய் - இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். அஜினமோட்டோ, சோள மாவு சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டினால்... கார்ன் சூப் ரெடி! சூப்பை ஒரு கப்பில் விட்டு மிளகுத்தூள், சீஸ் துருவல் தூவி சாப்பிடக் கொடுக்கவும்.

குறிப்பு: இது, சத்து மிக்கது... சுவையானது. 

 வெஜ் புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம் - 2, நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பச்சைப் பட்டாணி கலவை -  ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, தக்காளி - 2, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - 1, கிராம்பு, ஏலக்காய் - தலா 2,  தயிர் - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை வறுக்கவும். அதில் வெங்காய துண்டுகள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வெந்து வந்ததும்,  நறுக்கிய காய்கறி, தக்காளி துண்டுகள் சேர்த்து சூடுபட கிளறவும். பாசுமதி அரிசியில் தயிர் விட்டு, அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு, வதக்கிய காய்கறி கலவை, போட்டு கலக்கவும். அப்படியே குக்கரில் வைத்து மூடி, 2 விசில் வந்ததும் இறக்கி... நெய் விட்டு, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கினால்... வெஜ் புலாவ் தயார்.

 கீர்

தேவையானவை: கடலை மாவு - 4 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - கால் கப், மில்க்மெய்ட் - 4 டீஸ்பூன், முந்திரி அல்லது சாரைப்பருப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் நெய் விட்டு சாரைப்பருப்பு (அ) முந்திரி துண்டுகளை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் கடலை மாவை வாசனை வரும் வரை வறுத்து பால் விட்டு கொதிக்கவிடவும். பிறகு சர்க்கரை சேர்த்து, மில்க்மெய்ட் விட்டு கலக்கவும். சர்க்கரை   கரைந்து கொதிக்கும்போது... ஏலக்காய்த்தூள், வறுத்த பருப்பை போட்டு கலக்கினால்... கீர் ரெடி!

குறிப்பு: இதை சூடாகவோ, குளிர வைத்தோ கொடுக்கலாம்.

 ரஸ்க் ஐஸ்க்ரீம்

தேவையானவை: ரஸ்க் தூள் - ஒரு கப், பால் - ஒரு லிட்டர், மில்க்மெய்ட் - 4 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - 4 துளிகள், சர்க்கரை - கால் கப்.

செய்முறை: பாலுடன் சர்க்கரையை சேர்த்து, மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறுகும் வரை காய்ச்சவும். ரஸ்க் தூளில் காய்ச்சிய பாலை சிறிதளவு சேர்த்து, மிக்ஸியில் 5 நிமிடம் சுற்றவும். மில்க்மெய்ட் விட்டு கலந்து, எசென்ஸ் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் மிக்ஸியை ஓட விட்டு எடுக்கவும். இந்தக் கலவையை மீதமுள்ள பாலில் சேர்த்துக் கலக்கி, அலுமினியம் கப் அல்லது சின்ன கிண்ணத்தில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் ஃப்ரீசர் பகுதியில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து, பரிமாறவும்.

 திடீர் போண்டா

தேவையானவை: இட்லி மாவு - ஒரு கப், கடலை மாவு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிதளவு, கேரட் - வெங்காயம் (துருவியது) - 4 டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை விட்டு... கடலை மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி - பச்சைமிளகாய் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை. கேரட் - வெங்காய துருவல், உப்பு சேர்த்து  நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, இட்லி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டினாற் போல போடவும். வெந்து மேல் வரும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எண்ணெயை வடித்து அரித்து எடுக்கவும்.

குறிப்பு: சட்னி, தக்காளி சாஸ் இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

 மசாலா டீ

தேவையானவை: பால், டீத்தூள், சர்க்கரை - தேவையான அளவு. மசாலா பொடிக்கு: சுக்கு - 4 , கிராம்பு - 4, ஏலக்காய் - 4, பட்டை - 1, ஜாதிக்காய் -  மிளகு அளவு.

செய்முறை: மசாலா பொடிக்கு தேவையான பொருட்களை வெறும் கடாயில் வறுத்து, பொடி செய்து சலித்து, டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான பால், தண்ணீர் கலந்து அடுப்பில் வைக்கவும். சூடாகி வரும் சமயம் டீத்தூள், சிறிதளவு மசாலா பொடி போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து வந்ததும் வடிகட்டி சர்க்கரை சேர்த்துப் பருகவும்.

 கொய்யாப்பழ ஜூஸ்

தேவையானவை: கொய் யாப்பழம் - 2, எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், தண்ணீர் - 2 கிளாஸ், மிளகுத்தூள்,  உப்பு  - தலா ஒரு சிட்டிகை.

செய்முறை: கொய்யாப் பழத்தை 'கட்’ செய்து விதை நீக்கி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, கண்ணாடி கிளாஸில் ஊற்றி, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

 கேபேஜ்  பனீர் ரோல்ஸ்

தேவையானவை: துருவிய கேபேஜ் (கோஸ்) - ஒரு கப், உருளைக்கிழங்கு - ஒன்று (வேக வைத்து மசிக்கவும்), பனீர் (துருவியது) - அரை கப், கொத்தமல்லி இலை - சிறிதளவு, இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், பிரெட் தூள் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் துருவிய கேபேஜ், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிசையவும். கலவையில் சிறிதளவு எடுத்து நீளவாட்டில் உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உருட்டிய கலவையை பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். 

குறிப்பு: இதற்கு டொமேடோ சாஸ் தொட்டு சாப்பிடலாம்.

 முருங்கைக்காய் கீர்

தேவையானவை: முருங்கைக்காய் - 4, சர்க்கரை - கால் கப், பால் - 500 மில்லி, மில்க்மெய்ட் - 4 டீஸ்பூன், குங்குமப்பூ - 5, 6 இழைகள்

செய்முறை: முருங்கைக்காயை வேக வைத்து உள்ளிருக்கும் சதைப்பற்றை நார் இல்லாமல் எடுக்கவும். பாலை நன்றாகக் காய்ச்சி... சர்க்கரை, முருங்கைக்காய் விழுது, மில்க்மெய்ட் சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும். குங்குமப்பூ  சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: இது, சுவையுடன் சத்தும் மிக்கது. ரோஸ் எசென்ஸ் விட்டு கலந்து பருகினால், ரோஸ் மில்க் போல இருக்கும்.

 அவல் பகளாபாத்

தேவையானவை: அவல் - ஒரு கப், தயிர் - ஒரு கப்,  கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை - தலா 10, மாதுளம் முத்துக்கள் - 2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் -  ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அவலை போட்டு தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும். தயிர், உப்பு, கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, மாதுளம் முத்துக்களை சேர்த்து, அப்படியே பிசிறிய அவலில் கொட்டி கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், கிள்ளிய கறிவேப்பிலை  தாளித்து, அவல் கலவையில் சேர்த்துக் கலக்கினால்... அவல் பகளாபாத் ரெடி!

Related

30 நாள் 30 வகை சமையல் 623604023449074024

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item