Friday, December 28, 2012

3 நாள் அவஸ்தை -- ஹெல்த் ஸ்பெஷல்,

3 நாள் அவஸ்தை

'ஏன் பெண்ணாகப் பிறந்தோம்!’ என்று பெண்களே சலித்துக் கொள்ளும் நாட்கள் அந்த 'மூன்று நாட்கள்’. அந்த நாட்களில் சிலருக்குத் தாங்க முடியாத வயிற்று வலியும், இன்னும் சிலருக்குக் கால் குடைச்சல், இடுப்பு வலி, முதுகு வலி எனப் பல வலிகள் வரிசைகட்டி வாட்டும். இந்த வலிகள்  மனதையும் பாதிக்கும். ''இந்த மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே சிலருக்கு இந்தப் பிரச்னைகள் ஆரம்பித்துவிடும். பி.எம்.எஸ் (ப்ரி மென்ஸ்ட்ரல் சிண்ட்ரோம்’) என்ற அவஸ்தை நிகழும் இந்த நாட்களில் ஒரு சில பெண்கள் வழக்கத்துக்கு மாறாக, பார்க்கிறவர்களிடம் எல்லாம் கோபத்தைக் கொட்டுவார்கள். எரிந்து விழுவார்கள். சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் அல்ல... அவரது வீட்டில் இருப்பவர்களும் இந்த நாட்களின் வேதனைகளைத் தெரிந்து புரிந்து நடந்து கொள்ள வேண்டும்'' என்கிறார் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவர் பரிமளா.
பி.எம்.எஸ் எப்படி ஏற்படுகிறது?
பொதுவாக, பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 28 நாளில் மாதவிடாய் ஏற்படும். முதல் 15 நாளில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியாகும். கருமுட்டை உருவான பிறகு புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன் உற்பத்தியாகும். கருச்சேர்க்கை நடைபெறாத நிலையில் புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோனின் அளவு குறைந்து மாதவிடாய் உருவாகும். இந்நிலையில் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரான் என்ற இரு ஹார்மோன்களும் சரிவிகிதத்தில் இல்லாத நிலையில் ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம் பிரச்னை ஏற்படுகிறது.
அறிகுறிகள்?
பொதுவாக மாதவிடாய் சமயத்தில் மூன்று (அ) ஐந்து நாட்களுக்கு முன்னால் உடலில் சில அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துவிடும். உடல் அசதி, உடல்வலி, தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். சிலருக்கு அதிகமாகத் தூங்கவேண்டும், அதிகமாக சாப்பிடவேண்டும் என்றுகூடத் தோன்றும். 'ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்’ பிரச்னை இருப்பவர்களுக்கு டென்ஷன், படபடப்பு, தலைவலி, கை, கால்வலி போன்ற பிரச்னைகளும் சேர்ந்துகொள்ளும். மேலும் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகள் கனமாக இருப்பதுபோல உணர்வும் ஏற்படும். சிலருக்கு இயல்பான வேலைகளைச் செய்யமுடியாத அளவுக்கு உடல்சோர்வும் ஏற்படும். மன அழுத்தம் ஏற்பட்டு, 'கார்டிஸோல்’ (Cartisol) என்ற ஹார்மோன் உற்பத்தியாகும். இன்சுலின் உற்பத்தி குறைவாகும்போது சிலருக்கு அதிகமாக இனிப்பு சாப்பிட ஆசை ஏற்படும்.
பிரச்னை வரக் காரணங்கள்?
சரிவர ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது, துரித உணவு மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களை அதிகமாகச் சாப்பிடுவது, ஓடி ஆடி வேலை செய்யாமல், டிவி மற்றும் கம்ப்யூட்டர் முன்பே பழியாய்க் கிடப்பது என்று இருந்தால் இந்த வேதனைகள் அதிகமாகத் தெரியும்.
திருமணத்திற்கு முன்புள்ள இளம்பருவத்தினரையே இப்பிரச்னை அதிகமாகப் பாதிக்கிறது. சில குழந்தைகள் 13 வயதுக்கு முன்பாகவே பருவமடைந்து விடுகின்றனர். அவர்களைப் போன்றவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக ஏற்படும். மேலும் அவர்களுக்கு மாதவிடாய் குறித்த சரியான புரிதல் இல்லாத நிலையில் ஒருவித மன அழுத்தத்திற்கும் ஆளாவார்கள். சமச்சீரான உணவுகளைச் சாப்பிடுவது, நிறையத் தண்ணீர் குடிப்பது, காலை, மாலை வேலைகளில் நடைப்பயிற்சி மற்றும் ஸ்கிப்பிங் போன்றவற்றை மேற்கொள்வது இந்தப் பிரச்னையைத் தவிர்க்கச் சிறந்த வழிகளாகும்.
சிகிச்சைகள்?
இப்பிரச்னை உள்ளவர்களுக்கு அவரவருக்கு உள்ள அறிகுறிகளைப் பொருத்து மாத்திரைகளைக் கொடுக்கலாம். பாதிப்புகள் அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்றவாறு சிகிச்சைகள் அளித்தும், சில ஆலோசனைகள் கொடுத்தும் குணப்படுத்திவிடலாம்.

முக'வரி'யை இழப்போம் பெருமையாக! -- அழகு குறிப்புகள்.,

முக'வரி'யை இழப்போம் பெருமையாக!


''மஞ்சள் முகமே வருக...! மங்கல    விளக்கே வருக...!'' - முகத்தின் அழகை மஞ்சள் நிறத்துக்கும் மங்கல விளக்குக்கும் இணையாகச் சொல்லும் பாடல் இது. இந்த முக வசீகரம் இன்றைய காலத்தில் எத்தனை பேருக்குச் சாத்தியமாகி இருக்கிறது? சுருக்கம் இல்லாத, பளபளப்புடன் கூடிய முகத்தைப் பார்த்ததும் ஒருவிதப் பரவசம் நம்மை ஆட்கொள்ளும். முகத்தைச் சுத்தமாக வைத்திருந்தாலே முகம் பொலிவுடன் பளபளப்பாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது ஏற்படும் சுருக்கத்தைப் போக்க அழகுக் கலை நிபுணர்களும், மருத்துவர்களும் தரும் ஒரே அட்வைஸ்... மசாஜ்தான்! முகத்துக்கு செய்யும் மசாஜ்களைப் பற்றி இங்கே நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமா லட்சுமண்.  
''மசாஜ் செய்வதற்கு விரல் நுனியைத்தான் பயன்படுத்தவேண்டும். மசாஜ் செய்வதற்கு முன்பு முகத்தை மிதமான சுடு தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டு, காய்ச்சாதப் பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை நன்றாகத் துடைத்துவிடுங்கள். சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.  அதன் பிறகு முகத்துக்கு 15 நிமிடங்களும், கழுத்துப் பகுதிக்கு 5 நிமிடங்களும் மசாஜ் செய்யவேண்டும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் காலை மற்றும் இரவில் மசாஜ் செய்து கொள்ளவேண்டும்.
எதைக்கொண்டு மசாஜ் செய்வது?
கொய்யா, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள் போன்ற நன்கு கனிந்த பழங்கள், தக்காளி, வெள்ளரி, கோஸ், கேரட் போன்ற காய்கறிகளில் ஏதாவது ஒன்றின் மசியல். நல்லெண்ணெய், பாதாம், ஆலிவ் போன்ற எண்ணெய், இளநீர், 2 துளி தேன், தேங்காய்ப் பால் ஆகியவற்றைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.   
காய்ச்சாத பால் அல்லது தேங்காய்ப் பால் கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு மசாஜ் செய்தால் அவை பளிங்கு மாதிரியாகும். இதை 'தெரபிஸ்ட் மசாஜ்’ என்று சொல்லுவோம். 
மசாஜ் செய்கிறபோது கைகளை அவ்வப்போது ஆரஞ்சுச் சாற்றில் நனைத்துக்கொண்டு செய்யலாம். மசாஜ் செய்யும்போது, எப்போதுமே கீழிருந்து மேல்நோக்கித்தான் செய்யவேண்டும். மேலிருந்து கீழ் நோக்கிச் செய்தால் சதைப் பகுதி தொங்கிவிடும். ஜாக்கிரதை!'' என்கிற ஹேமா, மசாஜ் செய்யும் முறைகளையும் விளக்கினார்.
நெற்றி: சிலருக்கு நெற்றியில் வரிகள் தோன்றுவது, சருமம் இறுகுவதால்தான். நெற்றிக்கு மேல் வகிட்டில் இருந்து இரண்டு பக்கமும் அரை வட்டமாகத் தைலம் தடவுவது போல் மசாஜ் செய்யுங்கள்.  இதனால், நெற்றியில் உள்ள 'வரி’கள் காணாமல் போகும். 
புருவம்: இரு புருவங்களையும் தேங்காய் எண்ணெயால் கட்டை விரல், ஆள்காட்டி விரலால் நன்றாக நீவிவிட வேண்டும். இதனால் புருவம் 'வில்’ போன்று நன்றாக வளரும்.
கண்கள்:  இரு புருவங்களுக்கு நடுவில் மூக்குப் பகுதியில் இருந்து கண்ணைச் சுற்றி மசாஜ் செய்வதை மைண்ட் மசாஜ் என்போம். மிகவும் கவனத்துடன் இந்த மசாஜை செய்தால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் மறைந்து முகம் பளிச்சென மாறும்.
கன்னம்: சிலருக்கு முகத்தில் சதைப்பற்றே இல்லாமல் ஒட்டி இருக்கும். பழங்களால் மசாஜ் செய்வதன் மூலம் கன்னங்கள் பொலிவு பெறும். காய்கறிகளை நன்றாகக் கடித்துத் தின்னும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதும் ஒருவித மசாஜ்தான். கன்னத்தில் ஈரப்பதம் அதிகரித்து, சதைப்பற்றுக் கூடும்.

நீங்க பைக் பரத்தா? -- உபயோகமான தகவல்கள்,

நீங்க பைக் பரத்தா?

''சும்மா இல்லைடி, என்கூட வந்து    ஒருநாளைக்கு 200 கி.மீ பைக்ல சுத்திப்பாரு... அப்பத் தெரியும் எங்க கஷ்டம் என்னன்னு!'' - மார்க்கெட்டிங், பிசினஸ், பீட்சா சப்ளை என வண்டியோடு வாழ்க்கை நடத்தும் அத்தனை ஆண்மகன்களும் இப்படியான புலம்பல்களுக்கு நிச்சயம் ஆளாகி இருப்பார்கள். தினந்தோறும் அதிக நேரம் பைக் ஓட்டுபவர்களுக்கான உடல் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றியும் அவர்களுக்கான எளிய வகைப் பயிற்சிகளைப் பற்றியும் சொல்கிறார்கள் ஃபிசியோதெரபிஸ்ட் கவிதா மற்றும் பயிற்சியாளர் ஆண்டிச்சாமி இருவரும்.
''முதலில் நாம் பயன்படுத்தும் பைக்கில் சஸ்பென்ஷன் போன்ற விஷயங்கள் சரியாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். ஷாக் அப்சார்பர், ஹேண்டில் பார் மற்றும் கியர் அமைப்பு போன்றவை  முறையாக இருக்க வேண்டும். உட்காரும் இருக்கைப் பகுதி சமதளத்தில் இருக்க வேண்டும். உயரமாகவோ பள்ளமாகவோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தாலும் முதுகு வலி ஏற்படும். பைக்கில் உட்கார்ந்து ஓட்டும் முறையும் மிகவும் முக்கியம். இரு சக்கர வாகனங்கள் ஓட்டும்போது ஹேண்டில் பாரில் கைகளை நேராகவும் இறுக்கமாகவும் வைக்கக்கூடாது. தோள்பட்டையை, தலையை நோக்கி உயர்த்தியவாறோ அல்லது  குறுக்கிக்கொண்டோ ஓட்டுவதும் தவறு. ஒருபோதும் ஓட்டும்போது கூன்போட வேண்டாம். உடலில் இருக்கும் தசைகளுக்குத் தேவை இல்லாமல் வேலைப் பளுவைத் தரும் செயல்கள் இவை. உடம்பில்  வலியும்  ஏற்படும். 'காதல்’ பரத் போல ஒரு பக்கமாகத் தொங்கிக்கொண்டு ஓட்டினால் தசைநார்கள் இறுக்கம் அடையும். வயிற்றுக்குள் இருக்கும் தசைநார்களின் செயல்பாடுகள் பாதிப்படையும். 
ஹேண்டில் பார் மீது கைகளை நேராகவும் இறுக்கமாகவும் வைத்துக்கொள்ளாமல், மூட்டுப் பகுதி சிறிது வளைந்து இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். தோள்பட்டைகள் தளர்வாகவும் அதேசமயம் நிமிர்ந்தும் இருக்க வேண்டும். கால்களைப் பின்பக்கமாகவோ அல்லது அகட்டி வைத்துக்கொண்டோ ஓட்டுவதும் தவறுதான். இதனால் கெண்டைக்கால் தசைநார்களில் தேவை இல்லாத அழுத்தம் ஏற்பட்டு, குதிக்கால் வலி, கால் வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
நாம் பயன்படுத்தும் ஹெல்மெட் குறைவான எடையில் இருக்க வேண்டும். அதிக எடையுடன் இருந்தால் கழுத்து வலி வரும்.
முதுகுத்தண்டில் இருக்கும் 33 எலும்புகளுக்கு இடையிலும் ஸ்பாஞ்ச் போல ஒர் அமைப்பு இருக்கும்.  ஒரு ஷாக் அப்சார்பர் போல இது செயல்பட்டு, முதுகுத்தண்டைக் காக்கும். அதிகப்படியான குலுங்கல்கள் ஏற்படும்போது ஸ்பாஞ்சின் செயல்பாடு சீக்கிரமே குறைந்து வலி ஏற்படத் தொடங்கிவிடும். பைக் ஓட்டும்போது, அவ்வப்போது வயிற்றை உள் இழுத்து பத்து வினாடிகள் கழித்து இயல்பு நிலைக்கு விட்டால் இடுப்பில் இருக்கும் தசைநார்கள் வலுப்பெறும். முதுகின் கீழ்ப் பகுதியில் வலி ஏற்படாமல் தடுக்கும்.
தசைநார்கள் வலுப்பெறப் புரதம் நிறைந்த உணவுகளான பருப்பு வகைகளையும் கீரை வகைகளையும்  உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பயணங்களின்போது அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர் போன்ற இயற்கைக் குளிர்பானங்கள் நல்லது. ஹெல்மெட் இல்லாமல் வண்டியைத் தொடாதீர்கள். இது தலைக்குக் கவசமாக இருப்பதோடு, கண்களிலும் தலையிலும் தூசி படியாமலும் காக்கும்.
சிக்னல்களில் காத்திருக்கும்போது தேவையில்லாமல் ஆக்ஸிலேட்டரை முறுக்கி, சிக்னலையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருக்காமல்  அடுத்துவரும் பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கும் சில எளிய பயிற்சிகளைச் செய்யலாம்.

ஊர் சுற்றலாம் வாங்க - தகவல் கட்டுரை

மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும், பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்டிருந்த கீழ் நடுத்தட்டு
குடும்பங்களை, தாரளமயமாக்கமும், வி.பி.சிங்கும், கடின உழைப்பும், படிப்பும் கடந்த இருபதாண்டுகளில், பொருளாதார ரீதியாக மேலான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. அறுபது கிலோமீட்டர் தள்ளி இருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு செல்வதே ஒரு சுற்றுலாப்பயணத்தைப்போல அனுபவத்த அன்றைய சிறார்கள் பலர், இன்று தேவைக்கு மேலே கொஞ்சம் சேமிக்கும் அளவிற்கும் வசதியாகவே உள்ளனர். கார், வீடு, மனைவி குழந்தைகள் என இன்றைய சமுதாயம் எதிர்பார்க்கும் கூறுகள் அனைத்தும் கிடைத்தபின்னர், நாம் யோசிக்க
வேண்டியது சுற்றுலா. கையைக் கடிக்காத சுற்றுலாக்கள். இந்தியக் குடியரசில் இருக்கும் பலநகரங்களைச் சுற்றினாலே பாதி வாழ்க்கை கழிந்துவிடும் என்றாலும், நிறைய மக்களுக்கு
வெளிநாட்டு சுற்றுலா மேல் ஓர் ஈர்ப்பு இருக்கும். இன்றைக்கு ரேஷன் அட்டைகளைபோல ஏறத்தாழ அனைவரும் பாஸ்போர்டுகளை வாங்கி வைத்துக் கொள்வது சாதரணமாகிவிட்டது.

மக்களுக்கு வெளிநாட்டு பயணம் என்றால் , விசா எடுக்க வேண்டுமே, நாளாகுமே, சுற்றுலா முகவர்கள் நம்பிக்கையானவர்களா, நிறைய செலவு ஆகுமே என ஏகப்பட்ட கேள்விகளினால்
முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவார்கள். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 50க்கும் அதிகமான நாடுகள் விசா இன்றியோ அல்லது வந்து சேரும்பொழுது உடனடியாக விசா வாங்கிக்கொள்ளும் வசதிகளை செய்து கொடுக்கின்றன. இந்தக் கட்டுரையில் , சுற்றுலாவிற்கு ஏற்புடைய சில நாடுகளையும் அவற்றிற்கான விசா எளிமைகளையும் பார்க்கலாம்.

கிட்டத்தட்ட இந்தியாவின் இன்னொரு மாநிலம் போல இருக்கும் நேபாளம் நாட்டிற்கு விசா இன்றி பயணப்படலாம். எந்த நாட்டைப்பற்றி விபரங்கள் தெரிந்திருக்கோ இல்லையோ,
தாய்லாந்தின் சுற்றுலா சிறப்பு மக்களுக்கு தெரிந்திருக்கும். மலிவான செலவில், இரண்டு வார சுற்றுப்பயணத்திற்கு, பாங்காக், சியாங் மாய், சியாங் ராய், புக்கட் உள்ளிட்ட சில விமான

நிலையங்களில், வந்தவுடன் விசா எடுத்துக்கொள்ளும் நடைமுறை இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இருக்கின்றது. மடகாஸ்கருக்கு மேலெ, இருக்கும் தீவுக்கூட்டமான சீஷல்ஸ் நாட்டிற்கு ஒரு மாதம் அளவிற்கு வெறும் பாஸ்போர்ட்டுடன், திரும்ப வரும் பயணச்சீட்டு, தங்குமிடம், கொஞ்சம் பணம் ஆகியனவற்றுடன் பயணப்படலாம். மொரீசியஸ் நாட்டிற்கும் இதேவகையில் இரண்டு வாரங்களுக்குப் பயணப்படலாம்.எட்டும் தூரத்தில் இருக்கும் மாலத்தீவுகளுக்கு, அங்கு போனவுடன் 30 நாட்களுக்கு விசா எடுத்துக்கொள்ளும் நடைமுறை இருக்கின்றது.

ஐரோப்பாவிற்கு ஷென்கென் விசாவில் வருபவர்கள் (மாணவர்கள், குறுகிய கால வேலைக்காக வருபவர்கள்) ஷென்கென் விசாவை வைத்துக்கொண்டு, ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன், ஸ்லோவாக்கியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்லொவேனியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குப் பயணப்படலாம். சென்கென் உடன்படிக்கையின்படி, மேற்கண்ட எந்த நாட்டிற்கு நீங்கள் பயணப்பட்டாலும், சென்கென் விசாவைப் பெறுவீர்கள், அதை வைத்துக்கொண்டு முடிந்தவரை ஓர் ஐரோப்பியப் பயணம் செய்துவிடலாம்.ரோம் நகரத்திற்கு எந்த வகை சிறப்பு இருக்கின்றதோ, அதற்கு குறையாத மகத்துவம் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திற்கும் உண்டு. சென்கென் விசா அல்லது பிரிட்டன் அல்லது
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்திய பாஸ்போர்ட் குடிமக்கள், துருக்கியில் எந்த விமான நிலையத்திலும் விசா வாங்கிக்கொண்டு, 30 நாட்களுக்கு ஊர் சுற்றிப்பார்க்கலாம். அல்பேனியா, அண்டோரா, மாண்டிநிக்ரோ நாடுகளுக்கும் சென்கென் விசாவுடன் செல்லலாம்.நெடுநெடுவென வளர்ந்திருக்கும் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள், வீசும் பவுன்ஸர்களை கிரிக்கெட் ஆட்டத்தில் நேரிடையாக பார்க்க ஆசையா, கிளம்புங்கள் ஜமைக்காவிற்கு. வெறும் பாஸ்போர்ட்டுடன் 30 நாட்களுக்கு ஊர் சுற்றலாம்.

மேற்கத்திய சாயல் படியாத, சென்கென் அல்லாத முன்னாள் சோவியத் நாடுகளைப் பார்க்க ஆசையா? ஜார்ஜியா, தஜிகிஸ்தான் நாட்டிற்கு போய் சுற்றலாம். விமான நிலையத்தில் வந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட ஆர்மீனியா, அசார்பைசான் நாடுகளுக்கு பயணம் செய்ய ஆசைப்பட்டாலும் நடைமுறைகள் எளிதுதான். விமானநிலையத்திலேயே விசாவைப் பெற்றுக்கொள்ளலாம்.எத்தனை சுற்றினாலும் தென்னமெரிக்க காற்றை சுவாசிக்கவில்லை என்றால் வாழ்க்கை முழுமையடையாது. பொலிவியா நாட்டிற்கு போனதும் விசா வாங்கிக்கொள்ளலாம்.

சிங்கப்பூர் ஏறத்தாழ மேற்கத்திய மெட்ராஸ், ஒரு காலத்தில் அதற்கு இணையான நகர நாடான, ஹாங்காங்கிற்கு செல்ல , விசா எதுவும் தேவையில்லை. விசா இன்றி பாஸ்போர்ட்டுடன் இரண்டு வாரங்கள் ஊர்சுற்றலாம்.

எகிப்தில் தெற்கு சினாய் மாநிலத்திற்கு உட்பட்ட சுற்றுலா மையங்களில் தங்கி கண்டுகளிக்க இரண்டு வாரங்கள் அனுமதிக்கப்படுகிறது.

தொலைந்த வரலாற்று அடையாளங்களின் தொடர்ச்சியைக் காணவிரும்புபவரா நீங்கள், இருக்கவே இருக்கிறது கம்போடியா , இந்தோனேசியா. இரண்டு நாடுகளுக்கும் 30 நாட்கள் விசா வந்தவுடன் வழங்கப்படும் நடைமுறை உள்ளது.

மேற்சொன்ன முக்கியமான நாடுகளைத் தவிர, குட்டி குட்டித் தீவு நாடுகள் வெறும் பாஸ்போர்ட்டுடனோ அல்லது வந்தவுடன் விசா தரும் முறையின் கீழோ இந்தியக் குடிமக்களை ஊர்சுற்ற அனுமதிக்கின்றன. செயிண்ட் கிட்ஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், பிஜித் தீவுகள் ஆகியன குறிப்பிடத்தக்கன.

மேற்சொன்ன விபரங்கள் மாறிவரும் அரசியல் சூழல் காரணமாக மாற்றப்படலாம். இருந்தபோதிலும், உடனுக்குடன் தகவல்களைப் பெற கீழ்கண்ட தளத்தை அடிக்கடி பார்வையிடலாம். இந்தத் தளம்

http://www.iatatravelcentre.com/home.htm IATA என்ற பன்னாட்டு வான்வழிப்போக்குவரத்து அமைப்பினால் நடத்தப்படும் தகவல் இணையத்தளம். இவர்கள் தான் வான்வழி போக்குவரத்து விதிமுறைகளை, ஒருங்கிணைப்பவர்கள்.

தங்குமிடங்களை முன்பதிவு செய்ய இந்தத் தளத்தை மக்கள் பார்வையிடலாம் http://www.booking.com/

செலவுகளை மிச்சம் செய்யும் விரும்பும் தனியான சுற்றுலாப் பயணிகள், http://www.couchsurfing.org/ இந்தத் தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் சிறப்பம்சம் என்னவெனில், இந்தத் தளத்தின் உறுப்பினர்கள் , தங்களின் வீடுகளின் ஓர் அறையையோ அல்லது, ஹாலின் ஓரத்தில் சிறுபடுக்கையையோ ஏற்பாடு செய்து தருவார்கள். பணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. நம்பகத்தன்மையை அவர்களின் கணக்குகளில் இருக்கும் பின்னூட்டங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடியவன் தமிழன், சேமித்தல் நலமே... சேமித்தலை தன் வாழ்நாளில் சுற்றுலாவிற்கும் பயணங்களுக்கும் பயனபடுத்தும்பொழுது, அதன் வாயிலான கற்றல்கள் சேமிக்கும் பணத்தின் மதிப்பைக் காட்டிலும் அதிகம். உங்களின் எதிர்கால பயணத்திற்கு வாழ்த்துகள்.

சட்டம் அறிவோம் : ஆட்கொணர்விக்கும் நீதிபேராணை ! -- உங்களுக்கு உதவும் சட்டங்கள்

சட்டம் அறிவோம் : ஆட்கொணர்விக்கும் நீதிபேராணை !

ந்திய மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் சட்டம் பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது நீதிபேராணைகள். ரிட் மனு ( WRIT ) என சொல்லப்படும் இந்த நீதிப்பேராணைகள் ஐந்து இருக்கிறது. இதில் அதிகமாக பயன்படுத்தப்படுவது Habeas corpus எனப்படும் ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை.

ஒருவரை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து அவர் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறது என்ற சூழ்நிலையில் உயர்நீதிமன்றத்தை அணுகி இந்த ரிட் மனுவை தாக்கல் செய்யலாம்.

காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக ஒருவரை கைது செய்யும்போது மட்டுமல்லாமல், யாரேனும் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட  சூழ்நிலையிலும் அவரை உரியவர்களிடம் ஒப்படைக்க கூறி நீதிமன்றத்தில் இந்த ரிட் மனிவை தாக்கல் செய்யலாம். உதாரணமாக,  காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பெற்றோருக்கு தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் அவர்களை தேடி கண்டுபிடித்து, அந்த பெண்ணை அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.. அந்த நேரத்தில் கணவன் என்ற முறையில் தனது மனைவியை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் மனு போடலாம். மனுவை விசாரித்து அதில் உண்மை இருப்பின் நீதிமன்றத்தின் முன் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்திருக்கும் நபரை ஒப்படைக்க சொல்வார்கள்.

இந்த மனுக்களை நேரடியாக உயர்நீதிமன்றத்திலும் அல்லது உச்சநீதிமன்றத்திலும் தான் தாக்கல் செய்ய முடியும். மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய முடியாது.

சமீபத்தில் லக்னோவில் சித்தாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஹரிபிரசாத் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கியதன் பேரில் சிறையில் இருந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதி அவர் விடுதலையாக வேண்டும். அவர் மீது வேறு எந்தவித புகாரும் இல்லாதபோதும் உரிய தேதியில் விடுவிக்கப்படவில்லை. இதனை எதிர்த்து ஹரிபிரசாத் ஜூன் ஆறாம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஹரிபிரசாத்தை சட்டத்திற்கு புறம்பான வகையில் இன்னும் விடுதலை செய்யாமல் இருப்பதற்காக மாவட்ட சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு "ஹரி பிரசாத்தை சட்டத்திற்கு புறம்பான வகையில் இன்னும் விடுதலை செய்யாமல் வைத்திருப்பதற்கு உங்களது சம்பளத்திலிருந்து நஷ்ட ஈடு வழங்கினால் என்ன?" என கேட்டிருந்தனர். மூன்று வாரத்தில் பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உரிய தினத்தில் பதிலளிக்கவில்லை. அதனால் நீதிமன்றம் சிறை கண்காணிப்பாளர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரை கண்டித்தது. பிறகு ஹரிபிரசாத் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. தனது தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை செய்யாததை எதிர்த்து ஆட்கொணர்விக்கும் நீதிபேராணை மூலம் விடுதலையானார் ஹரிபிரசாத்.

இது போன்று சட்டத்திற்கு புறம்பான வகையில் ஒருவரை கைது செய்து வைத்திருக்கும் போதும் கூட ரிட் மனு தாக்கல் செய்யலாம்.  காணாமல் போயிருக்கும் நபரை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டி நீதிமன்றத்தை அணுகி ரிட் மனு தாக்கல் செய்ய  ஆட்கொணர்விக்கும் நீதிபேராணை பெரும் துணையாக இருக்கிறது.

மன அழுத்தம் - எப்படி தவிர்ப்பது ? -- ஹெல்த் ஸ்பெஷல்,

லைவாணி எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவாள். அவள் அழுகையை அவ்வளவு சீக்கிரம் நிறுத்தவும் முடியாது. அதோடு, எப்போதும்  அது இப்படி இருக்குமோ.. அப்படி இருக்குமோ என்று யோசித்துக் யோசித்து குழம்பிக் கொண்டே இருப்பாள். இதனால் அவளுக்கு அடிக்கடி தீராத தலைவலி வந்து சேரும். தலைவலிக்கு வைத்தியம் பார்க்க போனபோது தான் தெரிந்தது அவளுக்கு இருப்பது மன அழுத்தம் என்று. இதைக் கேட்டு அவளின் குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். காரணம் அவளுக்கு 21 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் எப்படி மன அழுத்தம் வரும் என குழம்பிப் போனார்கள். கலைவாணி மட்டுமல்ல, இது போன்ற பலரும் இந்த மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இந்த மன அழுத்தம் யாருக்கு வரும், எதனால் வரும், அதை எப்படி தீர்ப்பது என்று சொல்லுகிறார் மனநல மருத்துவர் அபிலாஷா.

மனம்தான் நம்முடைய அத்தனை செயல்களுக்கும் அடிப்படை. மனதை நன்றாக வைத்திருந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக அமையும். மனதை சுத்தமாகவும், நிம்மதியாகவும் வைத்திருந்திருக்க யோகா, தியானம் என்று பல வழிகளைக் கையாள்கிறோம்.

மன அழுத்தம் என்பது வியாதி இல்லை என்பதை முதலில் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். அது ஒருவிதமான மன சிக்கல் அவ்வளவுதான். ஆனால் மன அழுத்தம் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மன அழுத்தம் எதனால் வருகிறது ?

வாழ்க்கையில் எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்கவில்லை என்றால் மன அழுத்தம் வரும். குழந்தை பெற்ற பெண்ணுக்கு மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் இன்றைய பெரும்பாலான குடும்பங்கள் தனிக்குடும்பங்கள்தான். குழந்தையை எப்படி பார்த்துக் கொள்வது என்பது பலருக்கு தெரிவதில்லை. இரவில் கண்விழிக்க வேண்டி இருக்கும். சரியாக சாப்பிட முடியாது. இதையெல்லாம சமாளிப்பதற்கு பெண்களுக்கு எந்தவிதமான மனப்பயிற்சியும் தருவதில்லை. சிலருக்கு மரபு ரீதியாகவும் இந்த பிரச்னை வரும். பழக்க வழக்கம் குறித்த பிரச்னைகள், தாழ்வு மனப்பான்மை, எதாவது மிக பெரிய இழப்பு, நீண்ட நாட்களுக்கு மருந்து எடுத்துக் கொண்டவர்கள், தவறான மருந்து எடுத்துக் கொண்டவர்கள், குடி - புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மன அழுத்தத்தின் அறிகுறி

பசி, தூக்கம் எதுவும் இருக்காது. வாழ்க்கையின் மீது நம்பிக்கை என்பது துளியும் இல்லாமல் இருப்பார்கள். எப்போதும் ஒருவிதமான விரக்தி, எரிச்சல் இருந்துக் கொண்டே இருக்கும். மற்றவர்களிடத்தில் சகஜமாக பேசாமல் விலகி இருப்பார்கள். நான் எதற்காக வாழ வேண்டும் என்ற மனநிலையில், தற்கொலை குறித்து யோசித்துக் கொண்டே இருப்பார்கள். சிலருக்கு அதிகமான பசியும், தூக்கம் இருக்கும்.

தன்னை யாரும் கவனிப்பதில்லை, என்னுடைய பிரச்னைகளை யாரும் காது கொடுத்து கேட்பது  இல்லை என்று அவர்களே நினைத்துக் கொண்டு, சுவற்றில் தலை மோதிக்கொள்வது, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது என தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என அடிக்கடி முயற்சி செய்துக் கொண்டே இருப்பார்கள்.

எப்படி தவிர்ப்பது?

பிரச்னைகளை பற்றி கவலைப்படாமல், எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு மனநிலையில் இருந்தாலே போதும் மன அழுத்தம் குறைந்து, படிப்படியாக குணமாகிவிடும். தனிமையை தவிர்த்து நண்பர்களுடன் நேரத்தை கழிக்கலாம். நமக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யலாம். செடி வளர்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது, கோலம் போடுவது, புத்தகங்கள் படிப்பது, இசையை ரசிப்பது போன்ற விஷயங்களை செய்யலாம்.

எதிர்காலத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நண்பர்களுடன் பழகுவது மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கும்.  பக்தியும் இந்த விஷயத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் 'கடவுள்' என்பது பலரது நம்பிக்கைச் சின்னம். எனவே பக்தி மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும்.

எந்த பிரச்னையாக இருந்தாலும் சரி, நீங்கள் சம்பந்தப்பட்டவரிடம் வாய்விட்டு பேசினாலே போதும், பல பிரச்னைகள் காணாமல் போய்விடும்.

நம்முடைய பழக்கவழக்கங்களை சீராக்கிக் கொள்வதும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரு சிறந்த வழி. அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவது, சத்தான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என வாழ்க்கையை ஒரு வரைமுறைக்குள்  வைத்திருந்தால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

வாழ்க்கையை நேசியுங்கள்.. மனது தெளிவாகும்.. வாழ்க்கை வளமாகும்.!

நடந்தால் சுறுசுறுப்பு விர்ர் கொழுப்பு போயே போச்சு -- ஹெல்த் ஸ்பெஷல்,

பல லட்சம் செலவில் உடற்பயிற்சி சாதனங்கள் எல்லாம் வாங்கத் தேவையில்லை. சிறிது தூரம் நடந்தாலே போதும். ஆரோக்கியமான உடலமைப்பை தந்துவிடும். நடைப்பயிற்சி என்பது இயற்கையானது மட்டுமல்ல, பிற உடற்பயிற்சியை விட எளிதானதும், செலவில்லாததும் ஆகும்.

இதய நாளங்களுக்கு உரிய வேலை கொடுத்து தேவையான உந்து சக்தியை ஏற்படுத்தி இதயத்தில் உள்ள கொழுப்பை வெளியேற்ற நடைப்பயிற்சி உதவுவது எல்லோருக்கும் தெரிந்திருக்காது. நமது உடலில் மிகப்பெரிய தசை காலில்தான் உள்ளது. நடைப்பயிற்சியானது அந்த தசைகளை வலுவுள்ளதாகவும் உறுதியானதாகவும் ஆக்குகிறது.

சாதாரணமான நேரங்களில் கை தசைகளுக்கு வேலை இருக்காது. ஆனால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நம்மை அறியாமல் கைகளை அசைப்பதால் கை தசைகளும் முறுக்கேறுகின்றன. உடலில் வீணாக சேர்ந்துள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரல் சுறுசுறுப்படைகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. நிம்மதியான உறக்கத்தை கொடுக்கிறது. இதயநோயுடன் உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் தர நீரிழிவு நோய், பித்தகற்கள், ஆஸ்டியோ போரோசிஸ் பாதித்த நோயாளிகளுக்கு நடைப்பயிற்சி மிகவும் நல்லது.

வயதானவர்களுக்கு ஏரோபிக்ஸ், சைக்கிளிங், ஓட்டப்பயிற்சி ஆகியவை உகந்ததல்ல. ஆனால் அனைத்து வயதினருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது. நடைப்பயிற்சியே மனிதனுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது என்றால் அது பொய்யில்லை.

தேங்காய் - தக்காளி - பூண்டு தொக்கு---துவையல்கள்,

என்னென்ன தேவை?

தேங்காய் - அரை மூடி,
வெங்காயம் - 3,
தக்காளி - 5,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 10 பல்,
பச்சை மிளகாய் - 3,
மிளகாய் தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு,
சோம்பு - தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிது,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?


தேங்காயைத் துருவவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு தாளிக்கவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும். தக்காளியை நறுக்கிச் சேர்க்கவும். உப்பு சேர்த்து எல்லாம் வதங்கியதும், மிளகாய் தூள் சேர்க்கவும். பச்சை வாடை போனதும், தேங்காய்த் துருவல் சேர்த்து மறுபடி வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். எல்லாம் சேர்ந்து சுருள வந்ததும் இறக்கவும். வழக்கமான வெங்காயம், தக்காளி தொக்கு மாதிரி இல்லாமல், இது வித்தியாசமான சுவையில் இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

Thursday, December 27, 2012

இஸ்லாமிய மருத்துவம் --- மருத்துவ டிப்ஸ்,

1. பேரிச்சம்பழம்

செய்வினை – விஷம் குணமாக!
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்:

அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோ எந்தவிதமான விஷமோ, செய்வினையா அவரை அண்டாது.


​வாய்வுத் தொல்லை நீங்க!
வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம்.2. ஜைத்தூன்

ஷைத்தான் நெருங்காதிருக்க
“அலி! ஜைத்தூன் பழத்தைச் சாப்பிடுங்கள். அதன் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வோரிடம் 40 நாட்களுக்கு ஷைத்தான் நெருங்க மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்.


வலி, வாதம், வீக்கம், மறுப்பு நீங்க
இடுப்பு வலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின் அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத் தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல் எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்து போய்விடும். அப்போது இந்த எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில் தேய்த்தால் மறந்து போனது நீங்கி இரத்த ஓட்டம் சீராகி விடும்.


3. பேரிக்காய்

இதயம் வலுவடைய
“அதிகாலையில் வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிட்டால் நெஞ்சடைப்பு, இதயகனம், இதயபலஹீனம், மார்புவலி நீங்கி இதயம் பலப்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.


அழகான குழந்தை பிறக்க
“கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் உண்ணக கொடுங்கள். அதனால் குழந்தை அழகாகப் பிறக்கும். இதய அழுத்தம், இதயவலி (முதலிய நோய்கள்) ஏற்படாமல் இதயம் நன்கு செயல்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.


4. கருஞ்சீரகம்

நினைவாற்றல் பெருகிட
அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.
குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகத்தை உபயோகிக்க கூடாது.


சர்க்கரை வியாதி நீங்கிட
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி பரிபூரணமாக குணமாகி விடும்.


5. கோதுமை

இதய பலத்திற்கு
இதயமும், மூளையும் வலுவடைவதற்கும், வயிற்றுக் கிருமிகள் மற்றும் வயிற்றிலுள்ள கசடுகள் எல்லாம் நீங்கி இரைப்பை சுத்தமாக இருப்பதற்கும் தப்னியா (அதாவது கோதுமை மாவில் பால் ஊற்றி பாயாசமாகக் காய்ச்சி இறக்கிய பின்பு தேவையான இனிப்புக்கு தேன் கலந்த உணவை) உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்.


சத்தான உணவு
தொலிக் கோதுமை ரொட்டித்துண்டை எடுத்து, அதில் பேரீச்சம்பழம் வைத்து, இதுவே சிறந்த சாலன்: இதுவே சிறந்த சாலன் என்று இரண்டு தடவை நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சொன்னார்கள் என்று யூசுப்பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்: கோதுமையுடன் பேரீச்சம்பழம் சேர்த்த உணவை “எல்லா சத்துக்களும் நிறைந்த பரிபூரணமான உணவு” என்று மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


6. உப்பு

பைத்தியம் ஏற்படாதிருக்க
கொஞ்சம் உப்பை உண்டு உணவை உண்ணத் தொடங்குங்கள். அவ்வாறே உண்டு முடிந்த உடனும் கொஞ்சம் உப்பை உண்ணுங்கள். அதனால் பைத்தியம், குஷ்டம், குடல் வியாதி, மற்றும் பல்வலி போன்ற எழுபது வியாதிகள் உங்களை அண்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.


குளுமை குறைந்திட
வெள்ளரிக்காயை உப்பில் தொட்டுத் தின்பார்கள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள். அதனால் வயிற்றுக் குளுமை குறைந்து விடும் என்பார்கள்.. இவ்வாறு தின்பதால் மார்புச்சளி, பித்தம் வெளியேறிவிடும். உண்ணும உணவு ஜீரனமாகவும் செய்யும் என்று திப்புன்னபவியில் குறிப்பிடுகிறார்கள்.


7. இறைச்சி

உடல் அழகு பெற
இறைச்சி இவ்வுலக மக்களுக்கும், நாளைய சொர்க்கவாசிகளுக்கும் சிறந்த உணவாகும் என்றும், இறைச்சி உண்ணுங்கள். அதனால் உடல் வளர்ச்சியடைந்து அழகு பெரும். மேலும், மேனியின் நிறமும் மினுமினுப்பாகவும் இருக்கும் என்றும், இதை உண்ணுவதால் உள்ளத்திற்கு ஆனந்தமேற்படுகிறது என்றும்  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.


உடல் சதைபோட
ஒருநாள் விட்டு ஒருநாள் இறைச்சி உண்ணுங்கள். அதனால் உடல் அழகுபெரும். உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியமாகும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். நாற்பது நாட்கள் இறைச்சி உண்ணாமலும் இருக்காதீர்கள். அதனால் குணம் கெட்டு விடும் என்று அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.


8. முட்டை

ஆண்மைக் குறைவு நீங்க
யா ரசூலஅல்லாஹ்! என்னுடைய ஆண்மை போதிய வலுவில்லாமல் இருக்கிறது. என்று ஒரு ஸஹாபி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் முறையிட்டார்கள். அவருடைய ஆண்மைக் குறையை உணர்ந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் “முட்டையை உண்ணுங்கள். ஆண்மை அதிகரிக்கும்” என்று ஏவினார்கள்.


தாது பலம் பெற
எல்லாம் வல்ல இறைவா! எனக்கு தாதுபலம் மிக்க குறைவாக இருக்கிறது என்று ஒரு நபி அல்லாஹ்விடம் முறையிட்ட போது, “முட்டையை உண்ணுங்கள். தாது பலம் மிகும்” என்று அல்லாஹ் அந்த நபிக்குச் சொன்னான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.


9. தேன்

பலஹீனமே இல்லாதிருக்க
தேனைப்பற்றிய பழைய மருத்துவக் குறிப்பு இது. அதாவது அதிகாலையிலும், இரவில் நித்திரை செய்வதற்கு முன்பாகவும் ஒரு வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சப்பழச்சாறையும், சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்

1. உடல் எப்போதும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்
2. ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் நீங்கிவிடும்.
3. குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி விடும்.
4. குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்து விடும்.
5. இதய பாதிப்புக்கள் நீங்கி இதயம் பலம்பெறும்.
6. புதிய இரத்தம் அதிகமாக உற்பத்தியாகும்.


ஜீரண சக்திக்கு
நாம் உண்ணும உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பல சத்துக்களைத் தனித்தனியாக பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்பப்படுகிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரண சத்து குறைந்திருப்பதால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்று விடும். இரைப்பையின் பணி கெட்டு விடுமானால் பின்பு உடம்பு அவ்வளவுதான்.


10. பால்

நோய்கள் வராதிருக்க
பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். இதன் மூலம் இதயபாதிப்பு நீங்கி இதயம் பழம்பெரும். மூளை சக்திபெரும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும். ஜீரண சக்தி அதிகமாகும்.


நரம்புத்தளர்ச்சி நீங்க
பசும்பாலில் முருங்கைப்பீசினை இடித்துக் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி, உடல் நடுக்கம் மற்றும் நரம்புக்கோளாறுகள் எல்லாம் குணமாகும். (142) முருங்கைக்காயின் உட்பகுதிச் சதையையும் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்து தினசரி காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் டி. பி நோய் வலிமை இழந்து நாளடைவில் குணமாகி விடும். (143) தலைவலி நீங்க மிளகைப் பசும்பாலில் அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகிவிடும்.


11. தண்ணீர்

ஜீரண சக்திக்கு
உணவில் இடையிலும், உணவு உண்டவுடனும் தண்ணீர் அருந்தினால் அஜீரணகோளாறுகள் ஏற்படும் என்றும் பழங்களைத் தின்றவுடன் தண்ணீர் அருந்தக்கூடாது அதனால் மரணம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், குளித்தவுடன் தண்ணீர் குடித்தால் ஜலதோஷம் உண்டாகும் என்றும், ஐஸ் நீரை பொதுவாக அருந்தினால் பற்கள் சீக்கிரம் ஆட்டம் கண்டுவிடும் என்றும், தொண்டைக்கட்டி வலி உண்டாகும், இரைப்பையில் ஊறும் ஜீரணநீர் குறைவாகவே சுரக்கும் என்றும், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடல் பலஹீனமடைந்து இளைத்து விடும் என்றும், பூமிக்கு அடியில் ஓடும் தண்ணீரும் கிணற்றில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரும் கெடுதல் தரக்கூடியவை என்றும், கிணற்றுத் தண்ணீரையும், ஆற்றுத் தண்ணீரையும் கலந்து குடிப்பது உடல்நலத்தைக் கெடுத்து விடும், அவ்வாறே வெந்நீரையும், தண்ணீரையும் கலந்து குடிப்பது உடல் நலத்தை பாதிக்கும் என்றும் ஜாலீனுஸ், அப்கராத் அபூநயீம் போன்ற மருத்துவ மேதைகள் கூறுகிறார்கள்.


12. மழைத் தண்ணீர்

எல்லா நோய்களும் நீங்கிட
“எனக்கு ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு மருந்தை கற்றுத்தந்தார்கள். அம்மருந்து ஒன்றே போதும். வேறு எந்த மருந்தும் தேவை இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா நோய்களையும் இந்த ஒரு மருந்தின் மூலமே குணப்படுத்தி விடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒரு சமயம் ஸஹாபாப் பெருமக்களிடம் கூறியபோது, அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகிய நாற்பெறும் ஸஹாபாக்களும் அதை தத்தமக்குக் கற்றுத்தருமாறு வேண்டினார்கள். அப்போது “வேறு எதிலும் படாத சுத்தமான மழைத் தண்ணீரில் ஃபாத்திஹா, இக்லாஸ், ஃபலக், நாஸ் ஆகிய நான்கு சூராக்களையும் எழுபது எழுபது தடவை ஓதி அதில் ஊதி வைத்துக் கொண்டு, எப்படிப்பட்ட நோயால், செய்வினை மற்றும் கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களும் காலையும், மாலையும் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் என்னை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக் நிச்சயம் அந்த நோய் நீங்கிவிடும். மலட்டுத்தன்மை உடையவர் இவ்வாறு இதைக் குடித்து வந்தால் நிச்சயம் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பெறுவார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளினார்கள்.


13. ஜம்ஜம்

நினைத்தது நிறைவேற
“இந்த ஜம்ஜம் நீரை எந்த எண்ணத்துடன் யார் அருந்துகிறோமோ அது அவருக்கு நிறைவேறும். நான் மறு உலகில் தாகமில்லாதிருக்க இதை அருந்துகிறேன்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக இப்னு முபாரக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.


14. சுர்மா

கண்ணொளி பெருகிட
நீங்கள் தூங்கப்போகும் முன்பு சர்மாவை உங்களுடைய கண்களில் இட்டுக் கொள்ளுங்கள். நிச்சயமாக இது கண்களுக்கு கூடுதல் ஒளிதரும். இமை முடிகளை முளைப்பிக்கச் செய்யும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


15. பூண்டு

புண்கள் ஆறிட
பூண்டை பால் விட்டு அரைத்து புண்கள், வெயில் கொப்பலங்களில் வைத்தால் விரைவில் ஆறிவிடும். புண் ஆணையைக் கூட வெளியாக்கிவிடும். இன்னும் அநேக மருத்துவ குணங்கள் பூண்டிற்கு உண்டு. ஆனால் மூல வியாதியஸ்தர்கள் பூண்டை உபயோகிக்ககூடாது.
1. பக்காவாததிற்கு நல்லது. இதை வேகவைத்து வைகொப்பளித்தால் பல்வலி நீங்கி பற்கள் உறுதிப்படும். நவாச்சாரத்துடன் கலந்து வேன்குஷ்டத்திற்கு பத்துப் போட்டால் அது குணமாகும்.
2. பல தன்நீர்களை குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் பூண்டு சாப்பிட்டால் போதும். அந்தத் தண்ணீரால் எந்த தீமையும் ஏற்படாது.
3. தேள், பின்பு கடித்து விடாத்ல் பூண்டைத் தட்டி கடிவாயில் பத்துப் போட்டால் குணமாகி விடும்.


16. மருதோன்றி இலை

வயிற்றுவலி, தலைவலி நீங்க
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு தலைவலிக்குமானால் மருதொன்றியை அரைத்து தலைக்கு பத்து போடுவார்கள். மேலும் அல்லாஹ்வின் ஆணையால் இது நிச்சயம் பலன் தரும் என்றும் கூறுவார்கள்.


17. அத்திப்பழம்

உடல் அழகு பெற
உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டுவிடும். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


18. அதிமதுரம்

தொண்டைவலி நீங்க
பால்குடி பருவத்தில் குழந்தைக்கு தொண்டையில் ஒருவித அடைப்பு போன்ற வியாதி ஏற்படும். அதைப் போக்குவதற்காக தாய்மார்கள் அரபிய நாட்டில் குழந்தையின் வாயில் விரலை விட்டு அழுத்துவார்கள். (நம் நாட்டிலும் சில இடங்களில் இப்படி செய்வதுண்டு) இதைக்கண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இது மிகவும் தீங்கானது என்பதை உணர்ந்து “தங்களுடைய குழந்தைகளுக்கு தொண்டை வியாதி ஏற்பட்டால் விரல்விட்டு அழுத்தி வேதனை செய்யாதீர்கள். அதற்குப் பகரமாக அதிமதுரக்குச்சியை உபயோகப்படுத்துங்கள்” என்று அருளிய ஹதீஸை அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


மாதத்தீட்டு ஒழுங்காக வர
சில பெண்களுக்கு சரியாக மாதாமாதம் தீட்டு வராமல் கஷ்டப்படுவார்கள். அவ்வாறே சில பெண்கள் தீட்டுக்காலத்தில் வயிற்று வழியால் சிரமப்படுவார்கள். அப்போது அதிமதுரக்குச்சியைச் சாப்பிட்டு வந்தால் தீட்டு சரியாக வர ஆரம்பித்து விடும். வயிற்று வழியும் நீங்கி விடும்.


19. முள்ளங்கி

பசி உண்டாக
முள்ளங்கியை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.
1. தாதுபலம் மிகப்பலமாக இருக்கும்.
2. கிட்னியில் சேரும் கற்களைக் கரைத்து விடும்.
3. நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு நல்ல வலுவேட்படுத்தும்.
4. முடி உதிர்வதைத் தடுத்து அது நன்கு வளர்ச்சியடையச் செய்யும்.
5. முள்ளங்கியை அவ்வப்போது சமைத்து உண்டுவந்தால் தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கி விடும். குரல் இனிமையாகும்.
6. முள்ளங்கியைத் தட்டி தேள், பாம்பின் கடிவாயில் வைத்து கட்டினால் விஷம் இறங்கி விடும்.
7. இறைப்பைவலி, வயிற்றுவலி, வயிற்று எரிச்சல் ஏற்பட்டால் முள்ளங்கியைச் சாப்பிட்டால் குணமாகி விடும்.
8. முள்ளங்கியைத் தட்டிச்சாறெடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல் அடைப்பு வியாதி குணமாகிவிடும்.
9. முள்ளங்கி விதையை வெயிலில் காய வைத்து நன்கு தட்டி தேன் கலந்து லேகியமாக்கி வைத்துக்கொண்டு திமமும் இரவில் தூங்கப்போகும் முன்பு கொஞ்சம் சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் நீண்ட நேரம் தாம்பத்திய சுகம் பெறுவதற்கு இதைவிடச் சிறந்த மருந்து இனியொன்று இல்லை.


20. மாதுளம்பழம்

ஷைத்தான் விரண்டோட
எந்த வயிற்றில் மாதுளைப்பழத்தின் ஒரு விதைப்பட்டு விடுகிறதோ அதன் காரணம் அவருடைய இதயம் பிகாசிக்கும்.(அதாவது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி நன்கு செயல்படும்) மேலும் நாற்பது நாட்களுக்கு ஷைத்தான் அண்டுவதில்லை. விரன்டோடி விடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.


கண்ணோய் நீங்கிட
மாதுளை மொட்டை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவிட்டால் ஒரு வருடத்திற்கு கண்வலி, கண்ணில் நீர் வடிதல், பூளை தள்ளுதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது என்றும், மூன்று மாதுளை வித்தை விழுங்கி விட்டால் ஒரு வருடத்திற்கு கண்ணில் பூளை தள்ளாது என்றும் திப்புன்னபவியில் கூறப்படுகிறது.


இரத்தம் சுத்தமாக
இரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கரைபடித்து அடைத்துக் கொண்டால் இரத்த ஓட்டம் தடைபடும். அப்போது இதயபாதிப்பு ஏற்படும். இது அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தைத் நீங்கி விடும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல இரத்தம் நிறைய ஊற உதவும்.
1. வாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க மாதுளைப்பழம் சிறந்த உணவாகும்.
2. தாதுபுஷ்டிக்கு இது நிகரற்ற நல்ல மருந்தாகும்.
3. மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.
4. நெஞ்சு வலிக்கு இது நல்லது. மேலும் தொண்டை கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெற உதவும். மாதுளைப்பழத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் விரும்பி உண்டிருக்கிறார்கள்.


21. சுரைக்காய்

மூளை பலத்திற்கு
சுரைக்காய் சமைத்து விரும்பி உண்ணுங்கள். அது மூளைக்கு அதிக பலத்தைத் தரும். மேலும் அது வளர்ச்சி அடையும் ஒரு சமயம் அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் “ஆயிஷா! நீ சமைப்பது எனில் சுரைக்காயை (கறியுடன் சேர்த்து) அதிகமாக சமை. அது மனக்கவலையைப் போக்கி விடுவதோடு, நெஞ்சுக்குப் பலமும் தரும்” என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்.

மூத்திரம் கோளாறுகள் நீங்க
பல காய்கறிகள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் பிரியமாக உண்டிருக்கிரார்கள் என்றாலும் சுரைக்காயின் மீது தனிப்பட்ட விருப்பம் கொண்டு பிரியமாக உண்டிருக்கிறார்கள். அதிலும் இறைச்சியில் சுரைக்காயைச் சேர்த்து சமைக்கப்பட்ட சால்னாவை கோதுமை ரொட்டியில் ஊற்றிச் சாப்பிடுவதில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அலாதிப் பிரியம் இருந்தது. சுரைக்காய் சிறுநீர் நன்கு வெளிப்படுத்தும். மேலும் மூத்திரக் கோளாறுகளை நீக்கும்.


22. வெள்ளரிக்காய்

உடல் பருமனாக
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். நான் சதைபோட வேண்டும் என்பதற்காக எனக்கு என்னுடைய தாயார் பல மருந்துகளையும் செய்து பார்த்தார்கள். பலவிதமான பொருட்களை உண்ணக்கொடுத்தார்கள். அப்போதும் எனது உடலில் சதை பிடிப்பு ஏற்படவில்லை. பின்பு பேரீச்சப்பழத்தையும், வெள்ளரிக்காயையும் சேர்த்து எனக்கு உண்ணக கொடுத்தார்கள். அதனால் சில நாட்களில் நான் பருமனாகி விட்டேன். (பொதுவாக ஒல்லியாக உள்ள பெண்கள் சதைபோட இது சிறந்த உணவாகும்)


23. இஞ்சி, சுக்கு

ஜலதோஷம் நீங்கிட
கொஞ்சம் இஞ்சிச்சாறும், தேனும் சமஅளவு கலந்து மூன்று நாட்களுக்கு காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் பறந்து விடும்.
1. சுக்கு, வெள்ளைப்பூண்டு, குறுமிளகு இம்மூன்றையும் சமஅளவு எடுத்து, தட்டி பொடியாக்கி தேனில் குலைத்து சாப்பிட்டு வந்தால் மூலக்குரு நீங்கி விடும். அதன் வேர் அப்படியே அடியோடு அறுந்து விடும்.
2. சுக்கைத் தட்டி பாலில் கலந்து குடிக்க வேண்டும். அதையே மேனியில் தேய்க்கவும் செய்தால் பாம்புக்கடி விஷம் இறங்கி விடும்.
3. வாந்தி வருவது போன்று தோன்றினால் சுக்கை கொஞ்சம் வாயிலிட்டால் உடனே வாந்தி நின்று விடும்.


24. தயிர், மோர், வெண்ணை, நெய்

தாதுபுஷ்டிக்கு
பேரீச்சம்பழமும், வெண்ணையையும் சேரத்துச் சாப்பிட்டால் தாதுபுஷ்டிக்கு நிகரற்றது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். குரல் இனிமை தருவதற்கும் இது நல்ல உணவாகும்.
1. தேனும் வெண்ணையும் சேர்த்துச் சாப்பிட்டால் விழ மூட்டுக்களில் உண்டாகும் வலி நீங்கிவிடும்.
2. தயிரும், அக்ரூட்டும் வெவ்வேறு குணங்களைக் கொண்டதாகும். இவற்றைத் தனித் தனியாகச் சாபிட்டால் உடல் நலம் கெட்டுவிடும். ஆனால் இரண்டையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்றும் அதனால் இரண்டின் குணங்களும் சமநிலைப்பட்டு உடல் நலத்தையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தரும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளிய ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


25. காளான்

கண்ணோய் குணமாகிட
ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு சமயம் சில ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வருகை தந்து “காளான் பூமியின் அம்மை நோய்” என்று முறையிட்டார்கள். அப்போது “காளான் (பாலைவனத்தில் பனூ இஸ்ராயீல் சமூகத்தாருக்கு அல்லாஹ் வழங்கிய மேலான உணவான) “மன்” எனும் உணவு வகையைச் சேர்ந்ததாகும். அதன் நீர் கன்னோயகளை குணப்படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். இதற்குப் பின்பு நான் நான்கு ஐந்து காளான்களை பிடுங்கி கசக்கி சாறெடுத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்திருந்தேன். எனது அடிமைப் பெண்ணுக்கு அடிக்கடி கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. அப்போது கண்கள் வலிக்கவும் செய்தன. அதற்கு இந்த காளான் நீரை கண்ணுக்கு இட்டு வந்தேன். குணமாகி விட்டது னென்று அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.


26. எள்

தொண்டை வறட்சி நீங்கிட
எள் சாப்பிட்டால் வறட்சி, கரகரப்பு நீங்கி விடும். குரல் இனிமையாக இருக்கும்
1. எள்ளுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் இரைப்பை சுறுசுறுப்படையும்.
2. நரம்புத்தளர்ச்சி நீங்கி பலம் பெரும், மேனி மினுமினுப்பாக இருக்கும்.
3. முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர்ச்சி அடையும்.
4. நல்லெண்ணையை உணவில் ஊற்றிச் சாப்பிட்டால் குடல் புண்களை ஆற்றும். உடல் உஷ்ணத்தை தனித்து விடும்.
5. கர்ப்பம் தரிக்காதிருக்க எள் கைகண்ட மருந்தாகும். உடலுறவு கொண்ட பின்பு அதிகாலையில் வெறும் வயிற்றில் எள்ளும் சர்க்கரையும் சேர்த்து (எள்ளுருண்டை) சாப்பிட்டால் கர்ப்பறையில் சேர்ந்துள்ள விந்தின் ஜீவா அணுக்களை கலைத்து விடும். அதனால் கருத்தரிக்க மாட்டாது. மேலும் உடலுறவு கொள்ளும் போது ஆண் உறுப்பில் நல்லெண்ணையைத் தடவிக்கொண்டு உறவு கொண்டாலும் கருத்தரிக்காது.


27. திராட்சைப்பழம்

இரத்தம் சுத்தியாக
திராட்சைப்பழம் சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். உடலில் பலமும் தைரியமும் ஏற்படும். உடலில் சதைப்பிடிப்பு உண்டாகும். பித்தக்கோளாறுகளைப் போக்கி விடும். ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் “திராட்சைப் பழத்தை உண்ணுங்கள். அதன் கொட்டையை வீசி எறிந்து விடுங்கள். ஏனெனில் திராட்சைப்பழம் (ஷிஃபா) நோய் நிவாரநியாகும். அதன் கொட்டை நோயாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளியதாக அறிவிக்கிறார்கள்.

அழகான தோற்றத்திற்கு
உலர்ந்த திராட்சை அதிகமான நோய்களை நீக்கும் சிறந்த மருந்தும் உயர்ந்த உணவுப் போருளுமாகும். ஒரு சமயம் உலர்ந்த திராட்சையை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு அது அவர்கள் முன்னால் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம் “இதைச் சாப்பிடுங்கள். இது கோபத்தைத் தனித்து விடும். கபத்தை வெளியேற்றி விடும். நல்ல நிறத்தை உண்டு பண்ணி அழகான தோற்றத்தை தரும். வாய் நாற்றத்தை போக்கும், நரம்புத் தளர்ச்சியை நீக்கி பலப்படுத்தும்” என்று கூறினார்கள் என தமீமுத்தாரமீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.


28. பழரசம்

உடல் பலத்திற்கு
அன்னை ஆயிஷா ஸித்தீக்கா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் “நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்காக காலையில் பழங்களைப் பிழிந்து ஜூஸ் செய்து வைப்போம். அதை மாலையில் அவர்கள் சாப்பிடுவார்கள். அவ்வாறே மாலையில் ஜூஸ் செய்து வைப்போம், அதை அவர்கள் காலையில் சாப்பிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு தடவையும் காலையிலும், மாலையிலும் பழங்களை பிழிந்த பாத்திரத்தை அவசியம் கழுவி வைப்போம்” என்று கூரினார்கள். இம்முறைப் பிரகாரம் பழரசம் சாப்பிடுவது உடலுக்கு நல்ல வலுவைத் தரும். மேலும், ஒரு தடவை ஜூஸ் பிழிந்து விட்டப் பாத்திரத்தைக் கழுவிய பின்புதான் அடுத்த தடவை ஜூஸ் பிழிய வேண்டும். அதுவே சுகாதாரமாகும். கழுவாமல் வைத்திருந்தால் பழங்களிலுள்ள சர்க்கரையின் காரணம் ஈ, எறும்பு மற்றும் காற்றிலுள்ள கிருமிகள் வேகமாக அந்தப் பாத்திரத்தை தொடுகின்றன. அதனால் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு நோய் நொடிகள் விளைகின்றன.


29. சிர்க்கா

வயிற்றுக் கோளாறுகள் நீங்க
ஆயிரக்கணக்கான வயிற்றுக் கோளாறுகளை நீக்குவதிலும், இரைப்பையை சுத்தப்படுத்தி வலுவூட்டி, ஜீரண சக்தியை விரைவில் ஏற்படுத்துவதில் சிர்க்கா வல்லதாகும். குறிப்பாக மழைக்காலத்திலும், குளிர்க்காலத்திலும் நல்ல பலனைத்தரும். கருஞ்ஜீரகத்தை தட்டி சிர்க்காவில் கலந்து தேமல், கருந்தேமல், படர்தாமரை, ஊறல் போன்ற தொல் சம்பந்தப்பட்ட வியாதிகளில் தேய்த்து வந்தால் அவை குணமாகி விடும்.

ஆறாத புண்கள் ஆற
சிர்க்காவை பஞ்சு அல்லது துணியில் நன்கு நனைத்து ஆறாத புண்கள் நீண்ட நாட்களாக உள்ள புண்கள், புரையோடிய புண்களில் கட்டினால் வேதனை, வலி, வீக்கம் நீங்கி விரைவில் புண்கள் ஆறிவிடும். புண்களில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தாள் அல்லது சிருமூக்கு உடைந்து இரத்தம் வடிந்தாலும் சிர்க்காவை தடவினால் இரத்தம் வடிவது நின்று விடும்.


30. கஸ்தூரி

மரத்த நிலை நீங்க
சில நேரங்களில் இரத்த ஓட்டக் குறைவால் உடல் மரத்து விடும். அப்போதும் அந்த இடத்தில் கஸ்தூரியை கொஞ்சம் தேய்த்து விட்டால் மரத்துவிட்ட நிலை நீங்கி விடும்.
1. கஸ்தூரியை உபயோகிப்பது மற்றும் நுகர்வதால் நீர்த்துப்போன விந்து கட்டிப்பட்டு தாதுபலம் பெற்று நீண்ட நேர போக உகம் பெறலாம்.
2. மயக்கமுடையவருக்கு இதை நுகரச் செய்தால் உடனே மயக்கம் தெளிந்து எழுவார். இதயக் கோளாறுகளும் இதனால் நீங்கிவிடும்.
3. விஷ பொருட்களை உண்டுவிட்டாலோ, விஷ ஜந்துக்கள் தீண்டி விட்டாலோ கஸ்தூரியை நீரில் கலந்து கொஞ்சம் குடித்தால் கடுமை குறைந்து விஷம் இறங்கிவிடும். மேலும் இதனால் உள்ளுறுப்புகள் பழம் பெறும்.


31. ரோஜாப்பூ


குல்கந்து
நல்ல நிறமும், மலர்ந்து விரிந்த பெரிய தரமும் உள்ள ரோஜா பூக்களின் இதழ்களை ஆய்ந்து புழு பூச்சிகள் இருப்பின் அவற்றை நீக்கி சுத்தப்படுத்தி பின்பு ரோஜா இதழ்களின் எடையைப் போன்று மூன்று மடங்கு எடை கற்கண்டு சேர்த்து இரண்டையும் சுத்தமான கல் உறவில் கொஞ்ச கொஞ்சமாக இட்டு இடிக்க வேண்டும். நன்கு இடித்து லேகிய பக்குவமான பின்பு வாயகன்ற கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் இட்டு, அதில் மூன்றில் ஒரு பங்களவு சுத்தமான நல்ல தேன் ஊற்றி நன்றாக கிளறி விட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே குல்கந்து. கடைகளில் விற்பதை வாங்குவதை விட நாமே தயாரித்துக் கொள்ளும்போது சுத்தமாகவும், விலை குறைவாகவும் இருக்கும். இன்னும் ருசி வேண்டுமெனில் கசகசாவை இளஞ்சூட்டில் லேசாக வறுத்து அதில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் போஷாக்கிற்கு உன்னதமான டானிக்காகும் இது. இதை உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. இரத்த விருத்தி ஏற்படும். உடல் நன்கு மினுமினுப்பாகவும், தளதள என்றும் இருக்கும்.


32. அரிசி

இந்திரிய உற்பத்திக்கு
அரிசி உணவு இந்திரியத்தை நிறைய உற்பத்தி செய்வதோடு அதை நேர தாம்பத்திய சுகத்தைத்தரும். அரிசியில் தண்ணீருக்குப் பகரமாக பாலூற்றிச் சமைத்து சர்க்கரை அல்லது கல்கண்டு சேர்த்து பாயாசமாக வைத்துச் சாப்பிட்டால் முகவீக்கம் மற்றும் ஒற்றைத் தலைவலி குணமாகிவிடும். மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டும். அரிசி உணவு பரக்கத் பெற்ற உணவாகும். ஆதலால் அதை உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.


33. பருப்பு

மூளை வளர்ச்சி
பருப்பை உண்ணுங்கள்: அது பரக்கத் பெற்ற உணவாகும். அதனால் மூளை வளர்ச்சியடையும். இதயத்திற்கு மிகவும் நல்லது என்றும் 70 நபிமார்கள் பருப்பின் மூலம் பரக்கத் பெற்றிருக்கிறார்கள் அவர்களில் கடைசி (நபி) ஈசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களாவார்கள் என்றும் அதனால் கண்வலி வராது என்றும் பெருமை எனும் கெட்ட குணம் பருப்பால் நீங்கி விடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். பருப்பை அதிகம் உண்டால் பார்வை மங்கிவிடும். பருப்பைத் தட்டி அம்மை புண்களுக்கு வைத்தால் அது ஆறிவிடும்.


34. மீன்


உடல் கொழுத்திட
மீனை உண்டுவந்தால் உடல் கொழுத்துப் பெருத்து விடும். பொறித்த மீனை தின்று வந்தால் விந்து கெட்டிப்பட்டு தாது சக்தியை நிறைவாகப் பெறலாம். ஆனால் விரைவில் ஜீரணமேற்படாமல் தாமதமாகவே ஏற்படும். சேறும் சகதியும் உள்ள குட்டைகளிலுள்ள மீனை உன்னவது நல்லதல்ல. அதனால் உடல் கெட்டுவிடும். உப்பில்லாத நல்ல தண்ணீரிலுள்ள மீனே மிகவும் நல்லது. கருவாடு சூடானது. அதை அதிகம் உண்டால் அரிப்பும், சொறி சிரங்கும் ஏற்படும். அதிகம் முள் உள்ள மீனை உண்ணக்கூடாது.


35. கரும்பு

கரும்பு சாப்பிடுங்கள்: அது வயிறு நிறைய உண்டவனுக்கு ஜீரணத்தை கொடுக்கும்! பசித்தவனுக்கு வயிறை நிரப்பும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.
1. கரும்பு தாம்பத்திய சுகத்திற்கு நல்லது, நெஞ்சுவலிக்கும் நல்லது. மேலும் அதனால் இருமல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும். ஆனால் அதனால் சிறுநீர் அதிகம் போகும் என்று கிதாபுல் பரக்கத் எனும் நூலில் கூறுகிறார்கள்.
2. மருந்தே இல்லாதவருக்கும் திராட்சை, கரும்பு, ஓட்டகைப்பால் ஆகிய மூன்று மருந்துகள் போதும். எல்லா நோய்களையும் இவை நீக்கிவிடும் என்று இமாம் ஷாஃபி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்.


36. குங்குமப்பூ

 குங்கும நிறத்தில் குழந்தை பிறந்திட
கருத்தரித்த நான்காவது மாதத்திலிருந்து இரவில் தூங்கப்போகும்போது ரோஜாப்பூ குல்கந்து கொஞ்சம் சாப்பிட பின்பு ஒரு டம்ளர் பசும்பாலில் நயம குங்குமப்பூ கொஞ்சம் இட்டு கலக்கி சிறிது நேரம் கழித்து சாப்பிட்டு உறங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான இடையூறுகளுமின்றி சுகப்பிரசவம் ஏற்படுவதோடு குழந்தையும் குங்குமப்பூ நிறத்தில் அழகாகவும், புஷ்டியாகவும் கொழுகொழு என்றும் இருக்கும். கண்ட கண்ட டானிக்குகளையும் மருந்துகளையும் சாப்பிட்டு உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்வதோடு பணச் செலவுகளையும் ஏராளமாகச் செய்து சிரமப்படுவதை விட இது அற்புதமும், ஆரோக்கியமும் நிறைந்த கைகண்ட மருத்துவக் குறிப்பாகும். இதேமுறைப் பிரகாரம் ஏழுநாட்களுக்கு ஆண்கள் சாப்பிட்டால் நல்ல வண்ணமாக தாது புஷ்டி உண்டாகும்.


37. தர்பூஜ் பழம்


1. கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பழத்தை அதிகமாக சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை அழகாகவும், புஷ்டியாகவும் இருக்கும்.
2. இந்தப்பழம் பசி தீர்க்கும் உணவும், தாகம் தீர்க்கும் தண்ணீருமாகும். மூளைக்கு குளிர்ச்சியை கொடுத்து அதை பலப்படுத்தும். முதுகந்தண்டில் தேவையான அளவு நீரை உற்பத்தி செய்யும். வயிற்றுத் தொந்தரவுகளை நீக்கி விடும். மேலும் தாம்பத்திய சுகத்தை அதிகப்படுத்தும் என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.

தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips)தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips)

இன்று நான் உடல் நலம் சரியில்லாத எனது நெருங்கிய  நண்பரை நலம் விசாரிக்க சென்றேன்.அப்போது அவர் மருத்துவரை அனுகியதாகவும் அவர் சில மாத்திரைகளை கொடுத்ததாகவும்,ஆனால் அதில் 3 நாட்களாகியும் குணமடையவில்லை என்றும் தெரிவித்து கொண்டிருந்த போது அவருடைய 86 வயதாகிய பாட்டிஅவர்கள் காலத்து மூலிகை மருத்துவத்தை பற்றி கூறியதை குறிப்பெடுத்து உங்களுக்கு சுருக்கமாக அளிக்கின்றேன்.இவை அனைத்தும் மிகவும் பயனுள்ள மருத்துவம் ஆகும்.மூலிகை மருத்துவம்

(முக்கிய  குறிப்பு :- இதுவரை பாட்டியம்மா ஆங்கில மருந்தினை உண்டதில்லையாம் எந்த உடல்நலக்  குறைவு என்றாலும் இயற்கை மருத்துவம் மட்டுமே எடுத்துக்கொள்வாராம். அவர் உடல் சோர்வின்றி நல்ல திடகாத்திரமாகவே உள்ளார்.நண்பரே உடனே அவர்களுக்கு திஷ்டி  சுத்தவும்)

01.தலைவலி போக்க :-

அனைவருக்கும் தலைவலியானது அடிக்கடி ஏற்படும் ஒரு உபாதையாகும் இதனை தீர்க்க ஆங்கில மருத்துவத்தை நாடுவதைவிட பக்க விளைவில்லாத   மூலிகை மருந்தினை நாடலாம்.


நொச்சி இலை
 நொச்சி இலையினை  நசுக்கி,சாறாக்கி நெற்றியில் தடவினால் நொடியில்  தலைவலி குறைவதை உணரலாம் .சற்று நேரத்தில் முழுவதுமாக    தலைவலியானது குணமடையும்.

02.அடிக்கடி ஏற்பபடும்  தும்மல் :-

சிலருக்கு அடிக்கடி தும்பலினால் அதிகம் அவதிப்படுவர் அதனை எவ்வாறு தீர்ப்பது என பார்க்கலாம்.


இஞ்சி தேநீர்( Tea -டீ )
அவர்கள்  தினமும்  காலை மற்றும் மாலை இரு வேலை வெறும் வயிற்றில் இஞ்சி தேநீரினை(Tea )குடித்து வந்தால்.இவ்வாறு அடிக்கடி ஏற்ப்படும் தும்பல் தீரும்.


03.நீர்க்கோர்வை :-

சிலருக்கு ஏற்படும் இந்த நீர்க்கோர்வையினை  சரிசெய்ய சாம்பிராணி புகை போடும் போது அதனுடன் தேங்காய் மட்டை நார், மஞ்சள் தூள் சிறிதளவு கலந்து அதிலிருந்து வரும் புகையை இழுக்க நீர்க்கோர்வை சரியாகும்.


மஞ்சள் தூள்
04 . படை :-

படை பலவகையில் உண்டாவது வியர்வை, தூசு, உடலில் குறைவான எதிர்ப்பு சக்தி மற்றும் சில ஒவ்வாமை மூலம் ஏற்படுகிறது.


பப்பாளி மரம்
 இவற்றை குணப்படுத்த பப்பாளி இலைகளை அரைத்து படையின் மேல் தடவி ,15 நிமிடங்கள் கழித்து அரப்புத்தூள் போட்டு குளிக்கவேண்டும். தினசரி சுண்டை வத்தல் 10 எண்ணம் வறுத்து சாப்பிடவும்.நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் படை மறையும்.

05 . நோய் எதிர்ப்பு சக்தி பெருக:-

உடலில் நோய்கள் அண்டாமல் இருக்க, நோய் எதிர்ப்பு சக்தியினை பெருக்கி கொள்ளவேண்டும்.அதனை பெருக்கிக்கொள்ள பின்வருமாறு செய்யலாம்.


முருங்கை இலை
முருங்கை கீரையினை சமைக்கும் போது அதில் ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலைகளை நன்றாக சுத்தம் செய்து விட்டு முருங்கையுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு  சக்தி உண்டாகும்.

06 . காய்ச்சல் :-

நமக்கு அடிக்கடி ஏற்படும் காய்ச்சலினால்  அதிகம்  அவதிப்படுகிறோம்  அதனை போக்க  எளிய வழியினை காண்போம்.துளசி இலை
 காய்ச்சலை போக்க வேப்பம் பட்டை,துளசி,மிளகு சேர்த்து கஷாயம்  வைத்துக்குடித்தால் காய்ச்சல் குணமடையும்.


துளசி மாடம்
குறிப்பு :- துளசி செடி வெளியிடும் வாயுவானது வான்மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓசோன் ஓட்டையினை அடைக்க கூடிய வல்லமை உள்ளதாம்.எனவே தான் அந்தகாலத்தில் நம் பெரியோர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் துளசி மாடம் இருக்க வேண்டும் என கூறினார்களோ! பெரிய அறிவியல் மேதைகள் தான் போலும். அவர்களுக்கு நன்றி.

07 . தொடர் இருமல் :-

இதனாலும் நாம் அதிகம் அவதிப்படுகிறோம் இந்த தொடர் இரும்பலை போக்க தினசரி மாலையில் கல்யாண முருங்கையிலை கொழுந்துகளை பறித்து அடை தட்டி சாப்பிட்டு வந்தால் இருமல் நின்றுவிடும்.


கல்யாண முருங்கை இலை

08.தொற்று நோய்களை தடுக்க :-

காலரா,டைபாய்டு,மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவும் காலங்களில் கீழ் கூறியவாறு செய்து வந்தால் தொற்று நோய் வராமலும் மற்றும் பரவாமலும் தடுக்கலாம்.

ஒரு லிட்டர் குடிநீரில் 25 துளசியினை போட்டு நன்றாக கொதிக்க வைத்து சுத்தமான வடிக்கட்டியில் வடித்து கொண்டு குடித்து வந்தால் இது போன்ற தொற்று  நோய்கள் வராது.

09 . மார்பக வீக்கம் :-

சில இளைஞர்களுக்கு மார்பக வீக்கத்தினால் பெரிதும் மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பர். இது அவர்களுக்கான மருத்துவம்.


துவரை

துவரையை நன்றாக அரைத்து வீக்கம் உள்ள மார்பகத்தின் மீது தடவிவர மார்பக வீக்கம் நீங்கும்.

10.சளி தொல்லை நீங்க :-

மார்பக சளி நீங்க தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையினை  சாப்பிட்டு   வந்தால்  தொடரும் சளி தொல்லை நீங்கும்.


கற்பூரவள்ளி இலை

11 . கண் பார்வை குறைபாடு நீங்க :-

கருவேப்பிளையினை தினமும் சிறிதளவு பச்சையாக உண்டு வந்தால் கண் பார்வை குறைபாடு நீங்கி கண் பார்வை அதிகரிக்கும்.


கருவேப்பில்லை இலை
மேற்சொன்ன அத்தனையும் நமக்கு எளிதாக கிடைக்ககூடியவை தான். அதனால் இதனை நாம் தக்க சமயத்தில் சேர்த்துக்கொண்டு பயன் பெறுவோமாக.

கை, கால் அழகு பெற...ஹெல்த் ஸ்பெஷல்,

கை, கால் அழகு பெற...
* அவசரமாக வெளியில் செல்ல வேண்டியிருக்கும் போது, நகத்தில் தீட்டிய நெய்ல் பாலீஷ் காயாமல் தொல்லை கொடுக்கிறா? கவலையை விடுங்க. ஜில்லுன்னு கொஞ்சம் ஐஸ்வாட்டர் எடுத்து, அதற்குள் நகங்களை சில நொடிகளுக்கு முக்கி எடுங்க. நெயில் பாலிஷ் அழியாமல் இருக்கும்.
* கை விரல்களில், பாதாம் ஆயில் மூலம் மசாஜ் செய்து வந்தால், விரல்களில் ஏற்படும் வெடிப்பு சரியாகி விடும்.
* பாதமெல்லாம் பளபளப்பாய் இருக்க, சிலருக்கு முட்டிகள் மட்டும் காய்ந்து கறுத்துப் போய் இருக்கும். இதைப் போக்க, அரை மூடி எலுமிச்சையின் மேல், பாலாடைத் தடவி, அதை காய்ந்த பகுதிகளில் அழுந்தத் தேயுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்று ஒரு மாதம் போல இப்படி செய்து வர, முட்டியும் மினுமினுக்கும்.

மினி ரெசிபி! - கேழ்வரகு இனிப்பு தோசை!

தேவையானப் பொருட்கள்: கேழ்வரகு மாவு - 250 கிராம், அரிசி மாவு - ஒரு கப், வெல்லம் - 100 கிராம், ஏலக் காய்த் தூள் - சிறிதளவு, நெய் - 50 மில்லி.
செய்முறை: வெல்லத்தை தூளாக்கி, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். இதில், இரண்டு வகை மாவையும் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து, தோசைகளாக வார்த்து, இருபுறமும் சிறிது நெய்விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

ரத்தம் சுத்தமாக...மருத்துவ டிப்ஸ்!

ரத்தம் சுத்தமாக...
தினமும் காலையில் ஒரு கொட்டைப் பாக்களவு, வேப்பங்கொழுந்தை அரைத்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். 48 நாட்களில், உடலில் உள்ள சகல வியாதிகளும், போய்விடும்.

மினி ரெசிபி! - பிரெட் பக்கோடா!

தேவையானப் பொருட்கள்: பிரெட் - 10 துண்டுகள், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நறுக்கிய இஞ்சி - 2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டின் ஓரத்தை கட் செய்து நீக்கவும். நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை பிரெட்டுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்து வைத்த பிரெட்டை, பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: சட்னி அல்லது சாஸ் இதற்கு சிறந்த காம்பினேஷன்.

Monday, December 24, 2012

கிறிஸ்துமஸ் ரெசிபிகள்---சமையல் குறிப்புகள்,

கிறிஸ்துமஸ் ரெசிபிகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழும் நேரத்தில், அப்போது சாப்பிட்டு மகிழ முந்திரிக் கொத்து, பிளம் கேக் ஆகிய உணவு வகைகளின் ரெசிபிகள் இங்கே இடம் பெறுகின்றன...
தமிழகத்தின் தென் பகுதியிலுள்ள மாவட்டங் களின் பெரும்பாலான வீடுகளில் கிறிஸ்துமஸ் தினத்தன்று தவறாமல் செய்யப்படும் ஸ்பெஷல்... முந்திரிக் கொத்து! ஆனால், இதில் முந்திரி இருக்காது. இந்தப் பகுதியில் திராட்சையை 'முந்திரி’ எனக் கூறுவது வழக்கம். மலையாளத்திலும் திராட்சையை 'முந்திரி' என்றே கூறுகிறார்கள். இந்த ரெசிபியை செய்து முடித்த பின், அது பார்ப்பதற்கு திராட்சை கொத்துபோல் காட்சியளிப்பதால்... இந்தப் பெயர்!
தமிழகம் விட்டு இடம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் வீட்டிலும் இது தவறாமல் இடம்பெறுவதுதான் சிறப்பு! திருநெல்வேலியைச் சேர்ந்த நேசமணி சோன்ஜா, கடந்த பத்து வருடங் களாக, உத்தரப்பிரதேச மாநிலம், அலிகர் நகரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். அலிகர், முஸ்லிம் பல்கலைகழகத்தின் நர்சிங் (செவிலியர்) பள்ளியின் ஆசிரியராக இருக்கும் இவர், இங்கே முந்திரிக் கொத்து ரெசிபியைத் தருகிறார்.
அடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே, அங்கே கேக் நிச்சயம் இடம்பெறும். குழந்தைகள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ஆவலுடன் சுவைக்க விரும்பும் கிறிஸ்துமஸ் கேக் வகைககளில், பிளம் கேக் செய்யும் முறையை இங்கே வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த 'ஹாட் பிரெட்’ நிறுவனத்தின் தலைமை செஃப் கே.சுந்தர்.
இந்த ரெசிபிகளை செய்து பரிமாறி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை மேலும் குதூகலமாக்குங்க... விஷ் யூ மெர்ரி கிறிஸ்துமஸ்!

பிளம் கேக்
தேவையானவை: மைதா - ஒரு கிலோ, சர்க்கரை - ஒரு  கிலோ, முட்டை - 30, மார்கரைன் (க்ஷிமீரீ திணீt) - ஒரு கிலோ, மிக்ஸட் ஃப்ரூட் - 3 கிலோ (உலர் திராட்சை, டூட்டி புரூட்டி, செர்ரி, முந்திரி, ஜிஞ்சர் சிப்ஸ், ஆரஞ்சு பீல், பேரீச்சை, பிக்கிள் ஆப்பிள்), கரம் மசாலா - 10 கிராம், கேரமல் - 80 கிராம், பேக்கிங் பவுடர் - 10 கிராம், மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் - 100 கிராம், வெனிலா எசன்ஸ் - 10 மில்லி, லெமன் எசன்ஸ் - 5 மில்லி, ஆரஞ்சு எசன்ஸ் - 5 மில்லி, கிரேப் எசன்ஸ் - 5 மில்லி, பைன் ஆப்பிள் எசன்ஸ் - 2 மில்லி.
செய்முறை: கரம் மசாலா, பேக்கிங் பவுடர் மற்றும் மைதா... இவை மூன்றையும் தனியாக கலந்து வைக்கவும். கேரமலுடன் எசன்ஸ்களை தனியே கலந்து வைக்கவும். பிறகு, மார்கரைனையும், சர்க்கரையையும் ஒன்றாகக் கலக்கி, சர்க்கரை கரையும்வரை முட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக உடைத்து அதனுடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மிக்ஸட் ஃப்ரூட் மற்றும் மிக்ஸட் ஃப்ரூட் ஜாமை சேர்க்கவும். கடைசியாக, மூன்று கலவைகளையும் ஒன்றாக்கவும். பிறகு, 'கேக் பேனில்’ வைத்து 'அவன்’-ல் 160 டிகிரி சென்டிகிரேடில் 50-ல் இருந்து 60 நிமிட நேரம் வைத்து எடுத்தால்... பிளம் கேக் ரெடி!
குறிப்பு: கேக் தயாரிப்புக்கான பொருட்கள்...  பெரிய மளிகைக் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்.

முந்திரிக் கொத்து
தேவையானவை: பச்சைப்பயறு - 200  கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய் 6, மைதா - 100 கிராம்,  மஞ்சள்தூள் -  கால் டீஸ்பூன், சோடா உப்பு - சிறிதளவு, ரீபைண்டு ஆயில் - அரை லிட்டர், தண்ணீர், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து பச்சைப்பயறை மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த பயறை பிரஷர் குக்கரில் சேர்த்து சுமார் ஐந்து விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும். இதில், தண்ணீரை முழுமையாக வடித்து விடவேண்டும். ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும். வெல்லத்தையும் தனியாக இடித்து தூளாக்கிக் கொள்ளவும். இந்த மூன்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு இறுக்கமான மாவாக்கிக் கொள்ள வேண்டும். மைதாவை தனியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் கட்டியாகிவிடாமல் கரைத்துக் கொள்ளவும். இதில் மஞ்சள்தூள், சோடா உப்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும் (இது தோசை மாவு பதத்தில் இருப்பது அவசியம்). பிறகு, பச்சைப்பயறு மாவு கலவையை, திராட்சை பழங்களின் அளவுக்கு உருண்டைகளாகப் பிடித்து, தனியாக வைக்கவும்.

பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி, தேவையான அளவுக்கு காய்ந்ததும், மிதமான தீயில் அடுப்பை எரியவிடவும். உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை மூன்று மூன்றாக, அதாவது ஃ எழுத்து வடிவில் சேர்த்துப் பிடித்து, கரைத்து வைத்துள்ள மைதா மாவில் நனைத்து எடுத்து, கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரிக்கவும். இதை திருப்பி போட்டு இரண்டு பக்கமும் சரியாக வெந்தவுடன் எடுத்தால்... முந்திரிக் கொத்து  தயார்! சற்று அதிகமாக சாப்பிட் டாலும் திகட்டாது என்பது இதன் சிறப்பு அம்சம்.
குறிப்பு: பச்சைப்பயறு உடலுக்கு வலுவைத் தரும் தானியம் என்பதால், அதை அடிக்கடி உட்கொள்வது நல்லது. முக்கியமாக, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

நட்ஸ் - பேரீச்சம்பழம் கீர் --- சமையல் குறிப்புகள்,

நட்ஸ் - பேரீச்சம்பழம் கீர்
தேவையானவை: முந்திரி, பாதாம், வால்நட் - தலா 25 கிராம்,  பேரீச்சம்பழம் - 15, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடித்த பிஸ்தா - சிறிதளவு, நெய் - ஒரு ஸ்பூன்.
செய்முறை: முந்திரி, பாதாம், வால்நட், பேரீச்சை ஆகியவற்றை சிறிதளவு பால் விட்டு, ஊற வைத்து நைஸாக அரைக்கவும். மீதமுள்ள பாலில் சர்க்கரையை சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரைத்த விழுதைப் போட்டு, கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பிறகு, கீழே இறக்கி பொடித்த பிஸ்தாவை நெய்யில் வதக்கி சேர்த்து... ஏலக்காய்த்தூள் தூவி சூடாக பரிமாறவும்.
   மிகவும் சத்துள்ள கீர் இது.

நட்ஸ் - பேரீச்சம்பழம் கீர்: நட்ஸ்களை அரைக்கும்போது ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்துக் கொண்டால்... சுவை அதிகரிக்கும்.

தால் - வீட் முறுக்கு --- சமையல் குறிப்புகள்,

விறுவிறு வீட் முறுக்கு !

தால் - வீட் முறுக்கு
தேவையானவை: வேக வைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு, கேழ்வரகு மாவு - தலா ஒரு கப், வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவை வெறும் வாணலியில் நன்கு வறுத்து எடுத்து... அதனுடன் கேழ்வரகு மாவு, எள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும். வேக வைத்த பாசிப்பருப்பை மிக்ஸியில் நன்கு மசித்து சேர்க்கவும். பிறகு, தேவையான தண்ணீர் விட்டு, முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, மாவை தேன்குழல் அச்சில் போட்டு பிழிந்து, பொரித்து எடுக்கவும்.

பிஸினஸ் கேள்வி - பதில் வாருங்கள்... வழிகாட்டுகிறோம் !

பிஸினஸ் கேள்வி - பதில்

வாருங்கள்... வழிகாட்டுகிறோம் !
சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் திட்ட இயக்குநர் ராமசாமி தேசாய் பதிலளிக்கிறார்...
புடவை டிசைனுக்கான ஆர்டர்கள்... பெறுவது எப்படி?
''இறந்துபோன என் மகளின் நினைவாக, சட்டப்பூர்வமாக பதிவு செய்து ஒரு டிரஸ்ட் நடத்தி வருகிறேன். இதற்கு வருமான வரிவிலக்கும் கிடைத்துள்ளது. இதன் மூலம் முதியோருக்கும், குழந்தைகளுக்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். எனக்கு, உங்களிடமிருந்து இரண்டு வகைகளில் உதவிகள் தேவைப்படுகின்றன.
1. டிரஸ்ட்டுக்கு வெளிநாட்டவர் உதவி பெறுவது எப்படி?  
2. நான் புடவைகளுக்கு நன்றாக டிசைன் செய்வேன். ஸ்டோன் வொர்க், ஃபேப்ரிக் பெயின்ட்டிங் இவற்றுக்கு எப்படி, எங்கு ஆர்டர்கள் வாங்குவது? ஒரு சில கடைகளில் ஆர்டர் கிடைத்தால், சிலருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து உதவுவதுடன், அதில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை டிரஸ்ட்டுக்கும் செலவு செய்யலாம் என்பது என் ஆர்வம். வழிகாட்டுங்களேன்.''
- மங்கலவல்லி சுப்ரமணியன், சேலம்

''டிரஸ்டுக்கு வெளிநாட்டவர் உதவிபெற, முதலில் அதை. 'எஃப்.சி.ஆர்.ஏ' (FCRA- Foreign Contribution Regulation Act) சட்டத்தின்படி பதிவு செய்ய வேண்டும். இதற்கென உள்ள ஆடிட்டர்களை நாடினால், உதவுவார்கள். இதற்கு மத்திய அரசும் உதவும். அடுத்ததாக, உதவி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களை வெப்சைட்டில் தேடித் தேர்வு செய்யுங்கள். உங்கள் செயல்பாடுகளை குறும்படமாகத் தயாரித்து, அவர்களுக்கு அனுப்பி வைத்து தொடர்பு ஏற்படுத்திச் செயல்படுங்கள். வெளிநாட்டு நண்பர்களின் உதவியையும் நாடுங்கள்.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், உங்கள் ஊரில் உள்ள ஏதாவது ஒரு வங்கியில் இருக்கும், உங்களுடைய கணக்கின் மூலம் மட்டுமே வெளிநாட்டினரின் பணப்பரிவர்த்தனையை பெறலாம். மேலும் உங்கள் டிரஸ்ட் மூன்று ஆண்டுகள் கடந்திருந்தால் மத்திய, மாநில அரசுகளின் உதவியையும் பெறலாம். அதாவது, தங்களுடைய டிரஸ்ட் பற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தால், டிரஸ்ட் தொடர்பாக அங்கே நடைபெறும் கூட்டங்களுக்கு அழைப்பு வரும். அதில் கலந்து கொள்ளும்போது, உதவிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கிடைக்கும்.
உங்களின் அடுத்த கேள்விக்கு வருகிறேன். சேலத்தில் கட் வொர்க், பேட்ச் வொர்க், குந்தன் வொர்க், ஆரி வொர்க், ஹேண்ட் எம்ப்ராய்டரி வொர்க், ஸ்டோன் வொர்க் போன்ற வேலைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதற்கு அதிக ஆட்கள் தேவையும் உள்ளது. முதலில் நீங்கள் மேற்கண்ட வேலைப்பாட்டுக்கான பயிற்சியை மறுபடியும் முழுவதுமாக பெறுங்கள். அந்த வேலைப்பாட்டின் மாதிரியை துணிகளில் செய்து கொண்டு, சேலத்தில் உள்ள தையற்கடைகள் மற்றும் ஜவுளிக் கடைகளை அணுகுங்கள். உங்கள் மீதும், வேலையின் மீதும் நம்பிக்கை ஏற்பட்டால்... உடனே ஆர்டர்கள் தருவார்கள்.
ஒரு புடவைக்கு 2,000 ரூபாய் வரையிலும், ஒரு ஜாக்கெட்டுக்கு 600 ரூபாய் வரையிலும் செலவு செய்ய நிறைய பேர் காத்திருக்கின்றனர். எனவே, தைரியமாக இதைத் தொழிலாக ஆரம்பிக்கலாம். நீங்கள் தேர்வு செய்யும் வேலையாட்களுக்கு நல்ல பயிற்சி அவசியம். ஓர் ஆண்டுக்குள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, மாதம் 20 ஆயிரத்துக்கும் மேல் வருமானம் கிடைக்கும் என்பது, நிறைய பெண்கள் நிரூபித்துக் கொண்டிருக்கும் உண்மை. உங்களுக்குத் தேவையான பயிற்சியும், கடன் உதவியும் வங்கிகள் அளிக்கும். நீங்கள் சிறிது முயற்சி எடுக்க வேண்டும்... அவ்வளவுதான்.''
''நீட்ஸ் திட்டம், சுயமுன்னேற்றத்துக்கு கைகொடுக்குமா?''
''நான் முதுநிலை பட்டம் பெற்றுள்ளேன். தமிழக அரசு கொண்டு வந்துள்ள 'நீட்ஸ்' (NEEDS) திட்டத்தின் மூலம் சுயமுன்னேற்றத்துக்கான வழி காண விரும்புகிறேன். அத்திட்டம் பற்றிய விவரங்கள், குறிப்பாக எங்கள் மாவட்ட அளவில் கொடுக்க முடியுமா..?''
- எஸ்.கவிதா, மயிலாடுதுறை
''இந்த ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ள அரசுத் திட்டம்தான் 'நீட்ஸ்'! இத்திட்டத்தின்படி உங்களுடைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 தொழில்கள் வரை துவங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்கள். அதில் 12 தொழில்கள், மாவட்டத் தொழில் மையம் மூலமாக வங்கிக் கடனாகவும், 6 தொழில்கள் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC)மூலமாகவும் கொடுக்க உள்ளனர். திட்டத் தொகை 5 லட்சம் முதல் 100 கோடி வரை இருக்கலாம்.
மேலும் சில விவரங்கள்...
நீங்கள் பெறும் கடன்... நிலம், கட்டடம், இயந்திரம், மின்சாரம், நடைமுறை மூலதனம் என தேவையான செலவுகளுக்கானதாக இருக்கலாம். இதில் மானியமாக 25%  கிடைக்கும். இந்தத் தொகையானது... நிலம் அல்லது கட்டடம், இயந்திரம் ஆகியவற்றுக்குத் தரு வார்கள். மொத்தத் திட்டத்தில் 50% பெண் தொழில்முனைவோர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி. மற்றும் 18% தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிட வேண்டிய செய்தி.
உங்கள் மாவட்டத்துக்கு ரூபாய் 225 லட்சம் மானியம் கொடுக்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. குறைந்த எண்ணிக்கையில்தான் பயன்பெறுபவர்கள் உள்ளதால், பெரிய திட்டங்களுக்கே முன்னுரிமை அளிப்பார்கள். அதாவது, 50 லட்சம் முதல் ஒரு கோடி போன்ற திட்டங்களுக்கு! உங்கள் திட்டத்தை சரியாக அளவிட்டு நிலம், கட்டடம் என அனைத்துத் தேவைகளையும் திட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வந்து மாவட்டத் தொழில் மையத்தை அணுகவும்.
உங்களுக்கு ஒரு மாத உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியும் உண்டு. இத்திட்டம் தனிநபர் அல்லது பங்குதாராக உள்ள நிறுவனத்துக்கும் உண்டு. ஆனால், அனைத்து பங்குதாரர்களும் டிகிரி அல்லது டிப்ளமா அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். புதிய தொழில்முனைவோராக இருக்கவேண்டும். பங்குதாரர் நிறுவனம் என்றால், ஒருவருக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.
உங்கள் வாழ்விலும், 'நீட்ஸ்' விருட்ச விதை ஊன்றட்டும்!''
''35 வயதுக்கு மேல் வங்கிக் கடன் கிடைக்காதா?''
''சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் வேண்டி தனியார் தொண்டு நிறுவனத்தை அணுகியபோது, 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடன் பெற்றுக் கொடுப்பதில்லை என்று கூறினர். என் போன்றவர்களுக்கு வங்கிக் கடன் வாங்கவே முடியாதா?''
- ஜெ.சகுந்தலா, சென்னை
''இது தவறான தகவல். கவலை வேண்டாம். ஆண், பெண் இருபாலரும் 55 வயது வரை வங்கிக் கடன் பெற முடியும். பொதுவாக, திருமணத்துக்குப் பின் சில வருடங்கள் கணவர், குழந்தை, குடும்பம் எனச் சுழன்று, குழந்தைகளுக்கு தன் அரவணைப்பு அவ்வளவாக தேவைப்படாத நிலையில், பெண்களின் மனநிலை (35 - 45 வயதுகளில்) மாறும். 'சும்மா இருக்கிறோமே' என்கிற எண்ணம் தோன்றும். தங்களுக்கு அங்கீகாரம் தேவை என உணர்வார்கள். இப்போது அவர்களுக்கு தொழில் தொடங்க ஏற்ற பக்குவமும் கிடைத்திருக்கும். இந்த வயதில்தான் நீங்கள் இருப்பீர்கள் என நினைக்கிறேன். உங்களுக்குத் தேவையான தொழில் பயிற்சி மற்றும் கடன் உதவி நிச்சயம் கிடைக்கும்.
'யு.ஓய்.இ.ஜி.பி' (UYEGP) திட்டத்தில் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மானியத்துடன் கடன் கிடைக்கிறது. மாவட்டத் தொழில் மையத்தை அணுகவும். மேலும் நீங்கள் 45 வயது கடந்த பெண்ணாக இருந்தால், ஸ்டேட் பேங்க்  ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா பேங்க் போன்ற வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் பிணையம் இல்லாமலும் கடன் உதவி செய்கிறார்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.''

30 வகை திடீர் சமையல்---30 நாள் 30 வகை சமையல்

30 வகை திடீர் சமையல்

 
வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது... கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய '30 வகை திடீர் சமையல்’ ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால். ''உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு ஊட்டச் சத்து தரும் பொருட்களை கொண்டு தயாரித்து அளித்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறுங்க... நீங்களும் தேவையான அளவு சாப்பிட மறந்துடாதீங்க'' என்று பரிவுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, பிரமாதமாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

மீல்மேக்கர் டிக்கிஸ்
தேவையானவை: மீல்மேக்கர் - 20, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் - ஒன்று, மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கரை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து, பச்சைத் தண்ணீரில் இருமுறை நன்கு அலசி தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மைதா சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டி, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும். தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, புரட்டி எடுத்த  டிக்கிஸை போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.

கீரை  தால் கிரிஸ்பி
தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், முருங்கைக்கீரை - ஒரு கப் (ஆய்ந்தது), பொட்டுக்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த கடலைப்பருப்பு விழுது, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறி, ஆய்ந்த கீரையை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு புரட்டி... பிறகு இறக்கி, சுடச்சுட பரிமாறவும்.

மூங்தால்  பனீர் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - முக்கால் கப், பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், பூண்டு - தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... பூண்டு - பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு - பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஆலு ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், உருளைக்கிழங்கு - 2, சீரகம், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், வெங்காயம் - தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேக வைத்து, நன்கு மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கோதுமை மாவில் நெய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கிண்ணங்களாக செய்து, நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, சப்பாத்திகளாக திரட்டி, தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஓட்ஸ் அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி, ஓட்ஸ், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப், வெங்காயம் - 3 (மிகவும் பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும்.

ஸ்வீட் சோயா
தேவையானவை: சோயா உருண்டைகள் - 20 (வேக வைத்து, நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பொடித்த பனங்கற்கண்டு - 100 கிராம், மைதா - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ் பூன், நெய், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,  எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை. 
செய்முறை: மைதாவை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் சேர்த்து, சோயாவை போட்டு லேசாக வதக்கி, பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து நன்கு சுருள கிளறவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி... ஆறியதும் உருண்டைகளாக பிடிக்கவும். மைதா கரைசலில் உருண்டகளைத் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

புதினா மசாலா சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய புதினா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு - 3 பல், பச்சை மிளகாய் - 2, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுது, நெய், கொஞ்சம் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசையவும். மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

வாழைப்பூ  வெங்காய அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), பூண்டு - 4 பல்,  காய்ந்த மிளகாய் - 6, பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், சிறிய வாழைப்பூ -  ஒன்று (நரம்புகளை எடுத்துவிட்டு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), துருவிய சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊறவிடவும். முதலில் அரிசியை மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் ஓடவிட்டு, பிறகு பருப்புகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு வாழைப்பூ சேர்த்து வதக்கி... இதை மாவில் கொட்டி கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 10, ஸ்வீட் கார்ன் - 2, பெரிய வெங்காயம் - 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - அரை கப், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, உப்பு - சிறிதளவு.
செய்முறை: ஸ்வீட் கார்னுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் விட்டு, உருகியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு, உதிர்த்த கார்ன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி (தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்), ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.
பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து, அதன்மேல் கார்ன் கிரேவியை பரவலாக சேர்த்துப் பரிமாறவும்.

மேத்தி சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை - 2  சிறிய கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, சுத்தம் செய்யவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - 2 டீஸ்பூன், நெய் சிறிதளவு, எண்ணெய்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
இதற்கு ஆனியன் ராய்தா சிறந்த காம்பினேஷன்.

காரசார வேர்க்கடலை பொடி
தேவையானவை: வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப், வறுத்த வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்), பூண்டு - 6 பல், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட... சுவை அள்ளும்!

ஆந்திரா பருப்பு பொடி
தேவையானவை: பொட்டுக்கடலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, சீரகம் - அரை டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், உப்பு - சிறிதளவு.
செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்தெடுக்கவும். முதலில் மிக்ஸியில் மிளகாயை பொடித்து, பிறகு அதனுடன் சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். சூடான சாதத்தில் இந்த பொடியைப் போட்டு சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால்... சூப்பர் சுவையில் இருக்கும்.

மசாலா இட்லி
தேவையானவை: இட்லி - 10, வெங்காயம், தக்காளி - தலா 2, கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்,  இட்லிகளை ஓர் அங்குல சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி, உப்பை சேர்த்து வதக்கவும் (கொஞ்சம் நீர் தெளித்துக் கொள்ளலாம்). இதனுடன் பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி... சுடச்சுட பரிமாறவும்.

மல்ட்டி கிரெய்ன்ஸ் பொடி
தேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கறுப்பு உளுந்து, வெள்ளை சோளம், கடலைப்பருப்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா கால் கப்,  காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: தானிய வகைகளை வெறும் வாணலியில் தனித்தனியே நன்கு வறுத்தெடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்... காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, அனைத்து தானியங்கள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.

ஹனி சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், தேன் - ஒரு கப், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் லேசாக வறுத்தெடுக்கவும். கோதுமை மாவுடன் தேன், நெய், வறுத்த எள், தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

கிரீன்  ரெட் சாண்ட்விச்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் - 10, புதினா சட்னி - 2 டேபிள்ஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டின் இருபக்கமும் நன்கு பரவலாக வெண்ணெய் தடவவும். ஒரு பக்கம் புதினா சட்னி தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, அந்த பிரெட் ஸ்லைஸின் மேல் வெண்ணெய் தடவி அதன் மறுபக்கத்தில் டொமெட்டோ சாஸ் தடவி இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி விரும்பிய வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.

கேழ்வரகு  முருங்கைக்கீரை அடை
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், ஆய்ந்த முருங்கைக்கீரை (ஃப்ரெஷ்) - அரை கப், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு... வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு வதக்கி, கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். அடுப்பை அணைத்த பிறகு வாணலியின் அந்த சூட்டிலேயே முருங்கைக் கீரையைப் போட்டு, அதையும் ஒரு புரட்டு புரட்டி மாவில் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சற்று தளர பிசைந்து, தவாவில் மெல்லிய அடைகளாகத் தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்த பின் சுடச்சுட பரிமாறவும்.

நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ்
தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6, வேக வைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டீஸ்பூன், பூண்டு - 2 பல் (நன்கு தட்டி கொள்ளவும்), காய்ந்த மிளகாய் - ஒன்று (ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து நீரை நன்கு வடித்து விடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் சோயா சாஸ்,
டொமெட்டோ சாஸ், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மேலும் வதக்கி... கடைசியாக நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி, சுடச்சுட பரிமாறவும்.

முந்திரி பொடி
தேவையானவை: முந்திரி - 20, பாதாம் - 10, வெள்ளரி விதை, பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல் - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் வெள்ளரி விதை, கொப்பரைத் துருவல் இரண்டையும் தனித்தனியே வறுத்தெடுக்கவும் பொட்டுக்கடலையை வாணலியில் லேசாக ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை நன்கு வறுக்கவும். பிறகு முந்திரி, பாதாமை வறுத்தெடுக்கவும். அதன்பின் கறிவேப்பிலையையும் வறுத்து எடுக்கவும். அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்... அசத்தலான டேஸ்ட்டில் இருக்கும்.

பட்டாணி ஊத்தப்பம்
தேவையானவை: தோசை மாவு - 4 கப், துருவிய கேரட், வேக வைத்த  பச்சைப் பட்டாணி - தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - தலா ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன்,  கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, தோசை மாவில் கொட்டி, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். தவாவில் மாவை சற்று தடிமனாக வார்த்து... மேலே கேரட் துருவல், வெந்த பட்டாணி, கொத்தமல்லி தூவவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்த பின் எடுத்து, சூடாக பரிமாறவும்.

மூங்தால் பெசரட்
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி - சிறு கட்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சி, கொத்தமல்லியை சுத்தம் செய்யவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைக்கவும். மாவை தோசைக்கல்லில் சற்று தடிமனான அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுத்து பரிமாறவும்.

ஸ்வீட் கார்ன் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், இஞ்சி (சுத்தம் செய்யவும்) - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஸ்வீட் கார்னை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி... பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதனுடன் கோதுமை மாவு, உப்பு, நெய், மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன சப்பாத்திகளாகத் திரட்டவும். தவாவை சூடாக்கி, சப்பாத்தியை போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஸ்பைஸி ரவா கிச்சடி
தேவையானவை: வறுத்த ரவை - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, பச்சைப் பட்டாணி - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப் பால் - ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.

ஆலு  பாலக் கட்லெட்
தேவையானவை: பசலைக்கீரை - ஒரு சிறு கட்டு, உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), பிரெட் ஸ்லைஸ்கள் - 4, பச்சை மிளகாய் - இஞ்சி அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் - சிறிதளவு, மைதா மாவு - அரை கப், சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த  பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து... டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.

ஓட்ஸ்  காலிஃப்ளவர் உப்புமா
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,  பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்) மூடி, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.

சோயா  ஆனியன் பெசரெட்
தேவையானவை: சோயா உருண்டைகள் - 10 (வேக வைத்து நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பச்சைப்பயறு - ஒன்றரை கப், வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), மிளகு, சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப்பயறை 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் மிளகு, சோம்பு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். மாவை எடுக்கும் சமயம் சோயாவை சேர்த்து மேலும்  சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலையை வதக்கி, மாவில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

பூண்டு துவையல்
தேவையானவை: உரித்த பூண்டு - 20 பல், காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறிதளவு, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

பிரெட் வெஜ் புலாவ்
தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் - 6, வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6,  பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு, குடமிளகாய் - ஒன்று (நீளநீளமாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத் தூள் - கால் டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை நீளநீளமாக 'கட்’ செய்து கொள்ளவும். வெங்காயம், கேரட், பீன்ஸை நீளநீளமாக ஒரு இன்ச் அளவுக்கு 'கட்’ செய்து கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி... மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும். அதன் பின் டொமெட்டோ சாஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சூடாக பரிமாறவும்.

 வெஜ் சாண்ட்விச்
தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் - 10, புதினா - கொத்தமல்லி சட்னி - அரை கப், துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் - தலா கால் கப், சில்லி சாஸ், தக்காளி சாஸ் - தலா 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ்  ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும். அதன்மேல் புதினா - கொத்தமல்லி சட்னியை தடவவும். இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துப் பரிமாறவும்.

 பட்டாணி சீஸ் பன்
தேவையானவை: பன் - 4, சீஸ் துருவல் - அரை கப், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - கால் கப், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: சீஸ் துருவல், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை  ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பன்னின் மேல் பகுதியை மெதுவாக வெட்டி எடுத்துவிட்டு, கீழ்ப்பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி எடுத்து குழி செய்து கொள்ளவும். அதனுள் சீஸ் கலவையை ஸ்டஃப் செய்து கொள்ளவும். எல்லா பன்னிலும் இதே முறையில் ஸ்டப் செய்து வைத்து... மேல் பக்க பன்னால் மூடிக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து பன்னை அதன்மேல் வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். லேசாக பொன்னிறமானதும் மறுபுறமும் திருப்பி போட்டு சூடானதும் எடுத்து பரிமாறவும்.