மேஜர் ஆனதும்... மறக்காமல் செய்யுங்கள்!

மேஜர் ஆனதும் ... மறக்காமல் செய்யுங்கள் ! வாக்காளர் அடையாள அட்டை ! புதிதாக வாக்காளர் அடை யாள அட்டை பெற , மாவட்ட தால...



மேஜர் ஆனதும்... மறக்காமல் செய்யுங்கள்!

வாக்காளர் அடையாள அட்டை!

புதிதாக வாக்காளர் அடை யாள அட்டை பெற, மாவட்ட தாலுகா அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங் களில் படிவம் - 6 எனும் விண்ணப்பம் பெற வேண்டும் (தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப் பிக்கலாம்). விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் அந்த ஊரில் இருப்பவராக இருக்க வேண்டும். நிரந்தர முகவரிக்கான ஆதாரம் (குடும்ப அட்டை, பாஸ் போர்ட், ஓட்டுநர் உரிமம், வீட்டு வரி ரசீது, மின்சாரக் கட்டண அட்டை, காஸ் வாங்கும் ரசீது, தண்ணீர் கட்டண ரசீது, சமீபத்திய டெலிபோன் பில், வங்கி மற்றும் அஞ்சலகக் கணக்குப் புத்தகம் இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல்), வயதுச் சான்றிதழ் (பிறப்புச் சான்று/பள்ளி மதிப்பெண் பட்டியல் நகல்) இணைக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம்!

கியர் உள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் இலகு ரக வாகனத்துக்கான ஓட்டுநர் உரிமம், 18 வயது நிரம்பியதும் பெறலாம். முன்னதாக, எல்.எல்.ஆர் எனும் பழகுநர் உரிமம் (LLR - Learner’s License Registration) பெற வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் மருத்துவச் சான்று, உடல் தகுதிச் சான்று (தேவை இருப்பின்), மற்றும் முகவரிக்கு ஆதாரச் சான்று (பிறப்புச் சான்று, பள்ளிச் சான்று, பாஸ்போர்ட் இவற்றில் எதாவது ஒன்றின் நகல்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மூன்றும் இணைத்து, அடிப்படைக் கட்டணத்துடன் வட் டார போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப்பிக்க, அன்றே எல்.எல்.ஆர் கிடைக்கும். அதிலிருந்து 30 நாட்கள் கழித்தே ஓட்டுநர் உரிமம் பெற முடியும்.

ஒட்டுநர் உரிமத்துக்கான விண்ணப்பப் படிவத்துடன், உங்கள் வாகனத்தின் ஆர்.சி.புக், இன்ஷூரன்ஸ் சான்று, சாலைவரிச் சான்று, மாசுக்கட்டுப்பாடு சான்று, சொந்த வாகனம் இல்லையென்றால் வாகன உரிமையாளரின் அனுமதிச் சான்று மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கட்டணம் 250 ரூபாய், சேவைக்கட்டணம் 100 ரூபாய் சேர்த்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப்பித்து, ஓட்டுநர் உரிமம் பெறலாம்.’’

நிரந்தர கணக்கு அட்டை
(PAN - Permanent Account Number)

வங்கி கணக்குத் துவங்குவதற்கு, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் அசையா சொத்துக்கள் வாங்கும்போது, 50,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யும்போது, வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும்போது என எல்லாவற்றுக்கும் பான் கார்டு அவசியம். இதைப் பெற வருமான வரித்துறையின் படிவம்-49 பூர்த்தி செய்து, அத்துடன் வயதுச் சான்று மற்றும் முகவரிச் சான்றையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இது குழந்தைகளுக்கும் வழங்கப்படும். இதற்கு காப்பாளர் அவசியம். மேஜர் ஆனதும், இதே எண் தொடரும்.

பேங்க் அக்கவுன்ட்

புதிதாக கணக்குத் துவங்க, சம்பந்தப்பட்ட வங்கியிலிருந்து பெறப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், அடையாளச் சான்று நகல் (பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், அங்கீகரிக்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை இதில் ஏதாவது ஒன்று), முகவரிச் சான்று நகல் (மின் கட்டண ரசீது, தொலைபேசி ரசீது, குடும்ப அட்டை), தமது அக்கவுன்ட்டில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை (வங்கிக்கு வங்கி மாறுபடும்). வங்கியிலிருந்து உங்கள் புகைப்படம் மற்றும் பெயருடன் கூடிய பாஸ்புத்தகம், .டி.எம் மற்றும் டெபிட் கார்டு இரண்டு வாரத்துக்குள் கிடைக்கும். குழந்தைகளுக்கும் வங்கிக் கணக்கு துவங்க முடியும். இதற்கும் காப்பாளர் அவசியம். இந்தக் கணக்கையே மேஜர் ஆனதும், தொடரலாம்.

Related

உபயோகமான தகவல்கள் 8247960832598323303

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item