சிறுதானிய உணவுகள்!

சிறுதானிய உணவுகள் உ ணவே மருந்து... மருந்தே உணவு என்பது சித்தர் வாக்கு. அதற்கேற்ப உணவிலிருந்து தொடங்குவதுதானே உடல்நலம்? ஆனால், சுற்றுச்ச...

சிறுதானிய உணவுகள்

ணவே மருந்து... மருந்தே உணவு என்பது சித்தர் வாக்கு. அதற்கேற்ப உணவிலிருந்து தொடங்குவதுதானே உடல்நலம்? ஆனால், சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக மழைப்பொழிவு குறைகிறது; மண்வளம் குன்றுகிறது. வேளாண் இடுபொருள்களின் விலையேற்றம் காரணமாக விவசாயத்தையே பலர் கைவிடும் நிலை தொடர்கிறது. அதோடு, செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு காரணமாக வேளாண்மையே விஷமாகி வருகிறது.
இப்படியே தொடர்ந்தால், எதிர்காலத்தில் உணவு என்பது வயலில் விளையுமா என்பதே கேள்விக்குறிதான். இருப்பினும், நம்பிக்கை ஒளியாக ஒரு கீற்று மின்னுகிறது. அதுதான் சிறுதானியம். எப்படிப்பட்ட நெருக்கடி நிலைமை ஏற்பட்டாலும், நமக்குக் கைகொடுக்கப்போவது கடுகு போல அளவில் குறுகிய இந்தத் தானியங்களே. ஆம்... சிறுதானியமே நம் வருங்கால உணவு என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அப்படிப்பட்ட சிறுதானியங்களைக்கொண்டு சுவையான ரெசிப்பிகளை வழங்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜெ.கலைவாணி.
----------------------------------------------------------------------------------------------------------------------------
கம்பு - கொத்தமல்லித் துவையல்

தேவையானவை:

கம்பு - கால் கப்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
காய்ந்த மிளகாய் - 4
பச்சை மிளகாய் - 2
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:

வெறும் வாணலியில் கம்பு சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர், உளுத்தம்பருப்பு, கொத்தமல்லித்தழை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், புளி, இஞ்சி ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு அத்துடன் தேங்காய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாகத் துவையல் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். மணமான, பசுமையான கொத்தமல்லித் துவையலைச் சூடான சாதத்தில் நெய்விட்டு சேர்த்துச் சாப்பிடலாம். இட்லி, தோசை, இடியாப்பத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

குதிரைவாலி - கடலைப்பருப்பு உருண்டை

தேவையானவை:

குதிரைவாலி அரிசி - ஒரு கப்
கடலைப்பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 4
சமையல் சோடா - அரை டீஸ்பூன்
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குதிரைவாலி அரிசியுடன் கடலைப்பருப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், சமையல் சோடா, தயிர், உப்பு சேர்த்துத் தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும். தக்காளி சாஸ், சில்லி சாஸுடன் பரிமாறவும்.

சாமை ஆப்பம்

தேவையானவை:

சாமை அரிசி - 2 கப்
உளுத்தம்பருப்பு - அரை கப்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
இட்லி அரிசி - ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சாமை அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம், இட்லி அரிசி ஆகியவற்றைத் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து கிரைண்டரில் ஒன்றாகச் சேர்த்துத் தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துக் கரைத்து நான்கு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு, மாவுடன் சமையல் சோடா சேர்த்துக் கரைக்கவும். ஆப்பக் கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு நடுவில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, கடாயை ஒரு சுழற்று சுழற்றி மூடி போட்டு ஆப்பத்தை வேகவைத்து எடுக்கவும். சூடான, சுவையான ஆப்பம் தயார். இதே போல மீதமுள்ள மாவையும் ஆப்பமாக ஊற்றி எடுக்கவும். தேங்காய்ப்பாலுடன் பரிமாறவும்.

தேங்காய்ப் பால் செய்ய - தேவையானவை:

தேங்காய் - அரை மூடி (துருவவும்)
ஏலக்காய் - 2
சீரகம் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - கால் கப்

செய்முறை:

தேங்காய்த் துருவலுடன் ஏலக்காய், சீரகம், சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுத்து வடிகட்டவும்.

கம்பு ஸ்பைஸி போளி

தேவையானவை:

கம்பு மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - அரை கப்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - கால் கப்
கடலைப்பருப்பு - முக்கால் கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பை 20 நிமிடங்கள் ஊறவைத்து 15 நிமிடங்கள் வேகவைத்துத் தண்ணீரை வடிகட்டவும். அகலமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீர்விட்டு சர்க்கரை, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து சர்க்கரை கரைந்ததும் அதனுடன் கம்பு மாவு, கோதுமை மாவு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசையவும் (சுடுநீர் சேர்த்தும் பிசைந்துகொள்ளலாம்). மாவை பாலித்தீன் கவரில் சுற்றி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். வேகவைத்த கடலைப்பருப்பு ஆறிய பிறகு மிக்ஸியில் மாவாக அரைத்து எடுக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர், கரம் மசாலாத்தூள், சீரகம், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
கம்பு மாவை பாலித்தீன் கவரிலிருந்து எடுத்துச் சிறிய உருண்டைகளாக்கி சப்பாத்திகளாகத் திரட்டி, நடுவே மசாலா உருண்டையை வைத்து மூடி கைகளால் போளியாகத் தட்டவும். தோசைக்கல்லில் வெண்ணெய்விட்டு, தட்டிய போளிகளைப் போட்டு இருபுறமும் வேகவைத்துப் பொன்னிறமாக எடுக்கவும்.

பனிவரகு - கோதுமை போண்டா

தேவையானவை:

கோதுமை மாவு - அரை கப்
பனிவரகு மாவு - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - அரை கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
மிளகு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதனுடன் கோதுமை மாவு, பனிவரகு மாவு சேர்த்து போண்டா மாவு பதத்துக்குத் தண்ணீர்விட்டுக் கலக்கவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, மிளகு, உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, மாவை போண்டாக்களாக உருட்டிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். புதினா சட்னியுடன் பரிமாறவும்.

கம்பு மீல்மேக்கர் 65

தேவையானவை:

மீல் மேக்கர் - ஒரு பாக்கெட்
கம்பு மாவு - ஒரு கப்
மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பச்சரிசி மாவு - கால் கப்
கிறிஸ்பி ஃப்ரை மிக்ஸ் பவுடர் - கால் கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீல்மேக்கரை அரை மணி நேரம் ஊறவைத்து இரண்டு முறை கழுவி பிழிந்து எடுக்கவும். அகலமான பாத்திரத்தில் மீல்மேக்கர், கம்பு மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். கிறிஸ்பி ஃப்ரை மிக்ஸ் பவுடருடன் பச்சரிசி மாவு, அரை கப் தண்ணீர் சேர்த்துச் சிறிது கெட்டியாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு ஊறவைத்த மீல்மேக்கரை மாவுக் கலவையில் முக்கி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும். வாசமான மீல்மேக்கர் 65 தயார். சில்லி சாஸுடன் பரிமாறவும்.

பனிவரகு மினி பூரி

தேவையானவை:

பனிவரகு மாவு - அரை கப்
ரவை - அரை கப்
சோடா நீர் (soda water) - அரை கப்
கோதுமை மாவு - கால் கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு

செய்முறை:

ரவையுடன் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு ரவையைத் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுக்கவும். அதனுடன் கோதுமை மாவு, பனிவரகு மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, சோடா வாட்டரை ஊற்றிக் கலக்கவும். அதனுடன் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுப் பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, மாவை எடுத்துப் பிசைந்து, சிறிதளவு கோதுமை மாவைத் தடவி பெரிய வட்டங்களாகத் திரட்டிவைத்துக் கொள்ளவும்.. திரட்டியவற்றில் சிறிய வட்டமான மூடியால் மினி பூரிகளாக அழுத்தி எடுக்கவும். மீதமுள்ள மாவையும் இதேபோல வட்டவடிவில் செய்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பனிவரகு மினி பூரி தயார்.
இதை, உருளைக்கிழங்கு மசாலா அல்லது தக்காளித் தொக்குடன் பரிமாறவும். இரண்டு நாள்களுக்கு இந்த பூரி நன்றாக இருக்கும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து ஃப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.

பனிவரகு ரோல் ஸ்வீட்

தேவையானவை:

பனிவரகு மாவு - ஒரு கப்
நாட்டுச் சர்க்கரை - ஒரு கப்
கோதுமை மாவு - அரை கப்
வெண்ணெய் - அரை கப்

பூரணம் செய்ய:

நெய் - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - அரை கப்
பொடித்த வெல்லம் - அரை கப்
பாசிப்பருப்பு - அரை கப் (வேகவைத்தது)

செய்முறை:

வெல்லத்துடன் கால் கப் தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் வெல்லக் கரைசலை ஊற்றிக் கிளறவும். கலவை சுருண்டு வரும்போது பாசிப்பருப்பைச் சேர்த்து மேலும் கிளறி ஜாம் பதத்துக்கு வந்த பிறகு இறக்கவும். இதுவே பூரணம். நாட்டுச் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். அதனுடன் பனிவரகு மாவு, கோதுமை மாவு சேர்த்துக் கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். (சற்றுத் தளர பிசையலாம். அப்போதுதான் பூரணம் வைத்துத் திரட்ட எளிதாக இருக்கும்). இதை 15 நிமிடங்களுக்கு காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும். பிறகு மாவை எடுத்து சப்பாத்திகளாகத் திரட்டி, நடுவே சிறிதளவு பூரணத்தைத் தடவி பரப்பவும். பிறகு, மாவை உருளையாக உருட்டி, ஒரு முனையை நடுவில் பிடித்துகொண்டு மறுமுனையை வட்டமாகச் சுற்றி முனையை மடித்துகொண்டு சப்பாத்தி திரட்டியால் மெல்ல தேய்க்கவும். சப்பாத்திக்கல்லைக் காயவிட்டு வெண்ணெய் சேர்த்து ரோல் செய்தவற்றை ஒவ்வொன்றாக இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

கேழ்வரகு - கீரை மசாலா அடை

தேவையானவை:

கேழ்வரகு மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப்
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய அரைக்கீரை - 2 கைப்பிடியளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (பொடியாக நறுக்கவும்)

செய்முறை:

கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக ஊறவைத்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அரிசி மாவுடன் கேழ்வரகு மாவு, அரைத்த பருப்புக் கலவை, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் கீரை சேர்த்து மாவுடன் கலக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்துக்குக் கெட்டியாகக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை அடைகளாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய்விட்டு வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: அரிசி மாவுக்குப் பதிலாக இட்லி மாவு சேர்த்தும் அடை செய்யலாம்.

கம்பு - முளைக்கட்டிய பச்சைப் பயறு புட்டு

தேவையானவை:

முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப்
கம்பு மாவு - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்
நாட்டுச் சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
தண்ணீர் - அரை கப்

செய்முறை:

கம்பு மாவுடன் உப்பு சேர்த்துப் பிசிறவும். பிறகு தண்ணீர் தெளித்துக் கலந்து கட்டிகள் இல்லாமல் உதிர்க்கவும். மாவு முழுவதும் ஈரப்பதம் இருக்க வேண்டும். இதை காட்டன் துணியால் கட்டி இட்லி குக்கரில் ஆவியில் 20 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். பச்சைப் பயறை வேகவைத்து எடுக்கவும். வேகவைத்த கம்பு மாவுடன் பச்சைப் பயறு, நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: புட்டு மேலும் மென்மையாக இருக்க இரண்டு முறை ஆவிகட்டி எடுக்க வேண்டும். முந்தின நாள் இரவு ஆவிகட்டி வைத்து, மறுநாள் காலை மீண்டும் உப்பு சிறிதளவு கலந்த நீரைத் தெளித்துப் பிசிறி, கட்டிகள் இல்லாதவாறு உதிர்த்து எடுத்து ஆவியில் வேகவைத்தால், மாவு பூ போல் இருக்கும்.

Related

சிறுதானிய உணவுகள் 6879158444958247777

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item